பேஸ்புக் மூலம் இளம்பெண்களை மயக்கிய இளைஞர்!! பிரபல நடிகர் பெயரில் போலி அக்கவுண்ட்!!
விஜய் தேவரகொண்டா பெயரில் பேஸ்புக் கணக்கு.. இளம்பெண்களை வலையில் வீழ்த்திய இளைஞர்!!

நடிகர் விஜய் தேவரகொண்டா பெயரில் பேஸ்புக் கணக்கைத் தொடங்கி பெண்களிடம் இணையதளத்தில் ஆபாச செயலில் இளைஞர் ஒருவர் ஈடுபட்டுள்ளார்.
தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா தெலுங்கில் வெளிவந்த அர்ஜூன் ரெட்டி படம் மூலம் புகழ்பெற்றவர். அப்படத்திற்கு பிறகு தெலங்கானா, ஆந்திரா, தமிழகத்தில் இளம்பெண் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அதன் பிறகு தமிழிலும் தெலுங்கிலும் சில திரைப்படங்கள் நடிக்கத் தொடங்கி இளசுகளின் நெஞ்சில் இடம் பிடித்தவர்.
இந்நிலையில், தெலுங்கானா நபர் ஒருவர், விஜய் தேவரகொண்டாவின் பெயரில் போலியாக பேஸ்புக் கணக்கைத் தொடங்கி, இளம்பெண்களை கவர்ந்துள்ளார். பின்னர் அப்பெண்களிடம் ஆசைவார்த்தை பேசி மயங்கி ஆபாச உரையாடல்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த விஷயம் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் காதுக்கே சென்றதால் அவர் அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவரது சார்பில் க்ரைம் போலீஸாரிடத்தில் புகார் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் போலீசாரால் ஏற்பாடு செய்யப்பட்ட பெண் ஒருவர், அந்த போலி நபரிடம் போன் பேசி ஐதராபாத்துக்கு வரவழைத்துள்ளார். அப்போது அங்கு காத்திருந்த போலீஸாரும், விஜய் தேவரகொண்டாவின் தரப்பு ஆட்களும் அந்த இளைஞரை மடக்கிப் பிடித்தனர். இதனையடுத்து அந்த நபரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
newstm.in