Theme Check

விஜய் மல்லையா திவாலாகிவிட்டார்.. சொத்துகளை முடக்க பலே திட்டம் வகுத்த நீதிமன்றம் !!

விஜய் மல்லையா திவாலாகிவிட்டார்.. சொத்துகளை முடக்க பலே திட்டம் வகுத்த நீதிமன்றம் !!

விஜய் மல்லையா திவாலாகிவிட்டார்.. சொத்துகளை முடக்க பலே திட்டம் வகுத்த நீதிமன்றம் !!
X

கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த விஜய் மல்லையா உலகம் முழுவதும் அறிந்தவர். இவர் ‘கிங் பிஷர் ஏர்லைன்ஸ்’ நிறுவனத்தை நடத்தி வந்தார். இந்தியாவின் பாரத ஸ்டேட் வங்கி கூட்டமைப்பில் பாங்க் ஆப் பரோடா, கார்ப்பரேஷன் வங்கி, பெடரல் வங்கி, ஐடிபிஐ வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஜம்மு அண்ட் காஷ்மீர் வங்கி உள்ளிட்ட 13 வங்கிகளிடம் இருந்து 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று அதை திருப்பி செலுத்தாமல் வெளிநாடு தப்பினார்.

vijay-mallya

ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனுடக்கு தப்பியோடிய அவர் அங்கு கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப் பட்டார். அவரை இந்தியா அழைத்து வரும் முயற்சியில் மத்திய அரசு தொடர்ந்து முயன்று வருகிறது. கடந்த மே மாதம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடத்தப்பட்ட உயர் நீதிமன்ற விசாரணையில் வங்கிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட திவால் மனுவை நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இந்தியாவில் விஜய் மல்லையா கடன் பெறுவதற்கு ஈடாக சொத்துகள் வைத்துள்ளதாகக் கூறி நிறுத்தி வைத்தது.

vijay-mallya

இந்நிலையில், இங்கிலாந்து அரசு இந்தியாவின் கோரிக்கையை ஏற்று விஜய் மல்லையாவை கைது செய்தது. அவர் மீதான விசாரணை பிரிட்டன் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விஜய் மல்லையாவின் சர்வதேச அளவிலான சொத்துக்களை முடக்க பிரிட்டன் உயர் நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது. விஜய் மல்லையாவுக்கு எதிரன இந்த திவால் உத்தரவால், அவரது சொத்துக்களை முடக்க இந்திய வங்கிகளுக்கு நிபந்தனையற்ற அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

இதனால், மல்லையாவின் சொத்துக்களை முடக்கி கொடுத்த கடன் தொகையை மீட்க, வங்கிகளுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. 2013ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதியிலிருந்து வழங்கப்பட்ட கடனுக்கு 11.5 சதவீத வட்டி விகிதம் கணக்கிடப்பட்டு கூட்டு வட்டியும் சேர்த்து வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it