மணமக்களுக்கு தக்காளி பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இக்கம்!!
மணமக்களுக்கு தக்காளி பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இக்கம்!!

கோவையில் நடைபெற்ற திருமண விழாவில் விஜய் மக்கள் இயக்கத்தினர் மணமக்களளுக்கு தக்காளியை பரிசாக வழங்கினர்.
சமையலில் முக முக்கிய உணவுப் பொருளான தக்காளியின் விலை தற்போது தாறுமாறாக உயர்ந்துள்ளது. கோடை மழையினால் ஏற்பட்ட வரத்துகுறைவினால் தக்காளி விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
தக்காளி விலை தற்போது திடீரென விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. ஒரு கிலோ 120 வரை விற்பனையாகி வருகிறது. இதனால் மக்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவையில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் தக்காளியை பரிசாக அளித்து மணமக்களை ஆச்சர்யபட வைத்த நிகழ்வும் அரங்கேறியுள்ளது. கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகி அக்கீம் என்பவரின் மகள் அப்சானாவிற்கும், ஹாரீஸ் என்பவருக்கும் திருமணம் குனியமுத்தூர் பகுதியில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட விஜய் மக்கள் இயக்க இளைஞரணி நிர்வாகிகள் திருமண பரிசாக மணமக்களுக்கு தக்காளியை வழங்கினர். இதனை மணமக்களும் அங்கு கூடியிருந்தவர்களும் எதிர்பார்க்கவில்லை.

இதுவரை இல்லாத அளவிற்கு தக்காளியின் விலை உயர்ந்துள்ளதால் மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
newstm.in

