Theme Check

தேர்தலில் வெற்றியை குவித்த விஜய் மக்கள் இயக்கம்.. ரசிகர்கள் கொண்டாட்டம் !!

தேர்தலில் வெற்றியை குவித்த விஜய் மக்கள் இயக்கம்.. ரசிகர்கள் கொண்டாட்டம் !!

தேர்தலில் வெற்றியை குவித்த விஜய் மக்கள் இயக்கம்.. ரசிகர்கள் கொண்டாட்டம் !!
X

எதிர்பார்க்கப்பட்டது போன்றே விஜய் மக்கள் இயக்கத்தினர் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் குறிப்பிட்ட வெற்றியை பதிவு செய்துள்ளனர்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பல இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் தனித்து போட்டியிட்டது. கிராமபுற உள்ளாட்சித் தேர்தலில் குறிப்பிட்ட வெற்றியை பதிவு செய்ததால், இந்த தேர்தலில் எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்த நிலையில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

அதில், பொன்னேரி நகராட்சியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சுயேட்சையாக 16ஆவது வார்டில் போட்டியிட்ட மணிமாலா சிலம்பரசன் வெற்றி பெற்றுள்ளார். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா கொடிக்குளம் பேரூராட்சி 5 ஆவது வார்டில் விஜய் மக்கள் இயக்க வேட்பாளர் ராஜசேகரன் வெற்றி பெற்றுள்ளார்.
vijay mantram
குமாரபாளையம் நகராட்சியில் 9 சுயேட்சைகள் வெற்றி பெற்றுள்ள நிலையில் இழுபறி நீடித்து வருகிறது. அதில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த ஒருவரும் வெற்றி பெற்றுள்ளார். கோட்டக்குப்பம் நகராட்சியில் விஜய் மக்கள் இயக்கம் ஒரு வார்டில் வெற்றி பெற்றுள்ளது.

புதுக்கோட்டை நகராட்சி 4ஆவது வார்டில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட பர்வேஸ், ராணிப்பேட்டை வாலாஜாபேட்டை நகராட்சி 3ஆவது வார்டில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட மோகன் ராஜ், குமாரபாளையம் நகராட்சியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட வேல்முருகன், ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த வெற்றியை விஜய் மக்கள் இயக்கத்தினர் கொண்டாடி வருகின்றனர்.


newstm.in

Next Story
Share it