மறைந்த நடிகை சித்ராவுக்கு விஜய் டிவி விருது- கண்கலங்கும் ரசிகர்கள்..!
மறைந்த நடிகை சித்ராவுக்கு விஜய் டிவி விருது- கண்கலங்கும் ரசிகர்கள்..!

தனியார் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பிரபல சின்னத்திரை நடிகை சித்ராவுக்கு விஜய் டிவி விருது வழங்கும் நிகழ்ச்சியில் முக்கிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து தமிழக மக்கள் மனங்களில் இடம் பிடித்தவர் சித்ரா. சீரியலில் அவருடைய முல்லை என்கிற கதாபாத்திரம் மிகவும் பிரபலமாக இருந்தது. சீரியல்களை கடந்த வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்து வந்தார் சித்ரா.

இந்நிலையில் கடந்த 2020 டிசம்பர் மாதம் தனியார் விடுதியில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் நடிகை சித்ரா. அவருடைய மரணத்திற்கு காரணம் சித்ராவின் கணவர் ஹேம்நாத் தான் என குடும்பத்தார் குற்றஞ்சாட்டினர். அதை தொடர்ந்து ஹேம்நாத் போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார்.
நடிகை சித்ராவின் மரணம் தமிழ் திரையுலகையே உலுக்கியது. அவருடைய தற்கொலை செய்தியை கேள்விப்பட்டு கொரோனா ஊரடங்கியையும் காணாது மாநிலத்தில் பல்வேறு இடங்களில் இருந்து ரசிகர்கள் வந்து சித்ராவின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர். ஒரு சின்னத்திரை பிரபலத்தின் மரணம் பெரியளவில் பேசப்பட்டது அதுவே முதல்முறை.
அண்மையில் விஜய் தொலைக்காட்சியின் சின்னத்திரை விருது வழங்கும் விழா கோலாகலமாக நடந்து முடிந்தது. அதில் மறைந்த நடிகை சித்ராவுக்கு மக்களின் நாயகி என்கிற விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சித்ராவின் சார்பாக இவ்விருதை அவருடைய குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர். விருது அறிவிக்கப்பட்டு அதை வாங்க சித்ரா உயிருடன் இல்லையே என அவருடைய ரசிகர்கள் கண் கலங்குகின்றனர்.
newstm.in

