101 வயது மூதாட்டியின் ஆசையை நிறைவேற்றிய விஜயகாந்த்!!
101 வயது மூதாட்டியின் ஆசையை நிறைவேற்றிய விஜயகாந்த்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து, திரைப்பட நடிகர் சங்கத் தலைவராக உயர்ந்தவர் விஜயகாந்த். அதன் பிறகு அரசியலில் களமிறங்கிய அவர் தேமுதிக என்ற கட்சியை ஆரம்பித்து எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்துக்கு உயர்ந்தார். இருப்பினும் உடல்நிலை காரணமாக கட்சி பணிகளில் சரியாக விஜயகாந்த் ஈடுபடாமல் உள்ளார்.
தற்போது விஜயகாந்த் கொஞ்சம் கொஞ்சமாக உடல்நலம் தேறியுள்ளார். இந்நிலையில் நடிகர் விஜயகாந்த்தின் தீவிர ரசிகையான 101 வயது மூதாட்டி தனது பிறந்தநாளை விஜயகாந்துடன் கொண்டாடியுள்ளார்.

ரசிகை தெய்வானை என்பவர் தனது 101 ஆவது பிறந்தநாளை விஜயகாந்த்துடன் கொண்டாட வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். அதை நிறைவேற்றும் வகையில் தேமுதிக தலைமை கழகத்தில் மூதாட்டியின் பிறந்தநாளை விஜயகாந்த் கொண்டாடி மகிழ்ந்தார். அப்போது மூதாட்டியிடம் ஆசி பெற்ற அவர், இனிப்புகள் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கி மகிழ்வித்தார்.
இதற்கான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
newstm.in



