Theme Check

கெத்து காட்டிய விஜய்காந்த்! கொண்டாட்டத்தில் திமுக!

கெத்து காட்டிய விஜய்காந்த்! கொண்டாட்டத்தில் திமுக!

கெத்து காட்டிய விஜய்காந்த்! கொண்டாட்டத்தில் திமுக!
X

நீண்ட நாட்களாக அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவது பற்றிய பேச்சு தேதிமுக தொண்டர்களிடையே இருந்து வந்தது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறியில் நீடித்த நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக தேமுதிக அறிவித்துள்ளது.

தேமுதிக கேட்டதைவிட குறைவான தொகுதிகளையே அதிமுக ஒதுக்க முன் வந்தது. இதற்கு தேமுதிக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சென்னையில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதன் முடிவில் இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

பாமகவுக்கு அதிகளவில் இடங்களும், அவர்கள் வைத்த வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்த அறிவிப்பும் தேமுதிகவை அப்செட் செய்துள்ளது. கூட்டணி குறித்த பேச்சு வார்த்தைகள் நடைப்பெற்று கொண்டிருக்கும் போதே, தங்களுக்கு உரிய மரியாதை இல்லை, கூட்டணி பேச்சுவார்த்தையில் அலைகழிக்கப்படுகிறோம் என்றும், தேமுதிக யாருடைய தயவையும் எதிர்பார்த்து காத்திருக்கவில்லை.. தனித்தே தேர்தலைச் சந்திக்க தயாராகவே உள்ளது என்றும் சுதீஷ் கூறியிருந்தார்.

இந்நிலையில், கூட்டணியில் இடம்பெறாதது குறித்து தேமுதிகவின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் தொடர்ந்து மூன்று கட்டஙக்ளாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.

தேமுதிக சார்பில் கேட்கப்பட்ட தொகுதி எண்ணிக்கையையும், தொகுதிகளையும் ஒதுக்க மறுத்து உடன்பாடு ஏற்படாத காரணத்தினால், மாவட்ட கழக செயலாளர்களுடனான அவசர ஆலோசனை கூட்டத்தில் ஏற்பட்ட ஒறை கருத்தின் அடிப்படையில், அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அடுத்த மாதம் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைப்பெறவுள்ள நிலையில், தினம் தினம் அரசியலில் ட்விஸ்ட் ஏற்பட்டு வருகிறது. தனித்து அனைத்து தொகுதிகளிலும் களமிறங்குகிறது நாம் தமிழர் சீமான் கட்சி. திராவிட கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்று அறிவித்து தைரியமாக களமிறங்குவதால் தொண்டர்களிடையேயும், மக்களிடையேயும் சீமானுக்கு ஆதரவு பெருகி வருகிறது. கேப்டன் கூட்டணி அமைக்காமல் தேர்தலைச் சந்தித்த போது எதிர்கட்சி அந்தஸ்து கொடுத்து மக்கள் மகிழ்ந்தனர். இன்னும் சிறிது காலம் பொறுமையாக கூட்டணி அமைக்காமல் இருந்திருந்தால் தேமுதிக நல்ல இடம் பெற்றிருக்கும். இதையெல்லாம் ஆலோசித்து, கட்சியை வளர்க்கவும், பாமகவை விட அதிகளவில் வாக்கு சதவிகிதத்தை உயர்த்தவும் தனித்தே தேமுதிக களமிறங்குகிறது.

இந்த அறிவிப்பு ஸ்டாலினை குஷிபடுத்தியிருக்கிறது என்கிறார்கள். அதிமுகவின் பலம், தேமுதிக வெளியேறியதால் குறைந்திருக்கிறது எனவும், இது வாக்குகளைப் பிரிப்பதற்கும், திமுக வெல்வதற்கும் உதவியாகவே இருக்கும் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.

Tags:
Next Story
Share it