Theme Check

விக்ரம் பட நாயகி ஜவுளிக் கடையில் தீ விபத்து..!

விக்ரம் பட நாயகி ஜவுளிக் கடையில் தீ விபத்து..!

விக்ரம் பட நாயகி ஜவுளிக் கடையில் தீ விபத்து..!
X

விக்ரம் நடிப்பில் 2001-ம் ஆண்டு வெளியான ‘காசி', 'என் மன வானில்', 'சாது மிரண்டா' ஆகிய படங்களில் நடித்தவர் காவ்யா மாதவன்.

மலையாளத்தில் ஏராளமான படங்களில் நாயகியாக நடித்துள்ளார். மலையாள நடிகர் திலீப்பை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
Kavya Madhavan's Target Boutique Catches Fire In 2022 - Xpresskind
நடிகை காவ்யா மாதவனுக்கு சொந்தமாக லக்ஷியா என்ற பெயரில் துணிக்கடை உள்ளது. இந்தக் கடை கொச்சி எடப்பள்ளி பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் இந்தக் கடையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைத்தனர்.

இருப்பினும், துணிகள் மற்றும் தையல் இயந்திரங்கள் தீயில் எரிந்து சேதமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. காவல்துறையினர் விசாரணைக்கு பிறகே தீ விபத்துக்கான முழுமையான காரணம் தெரியவரும் என்று கூறப்படுகிறது.

Next Story
Share it