அதிர்ச்சியில் கிராம மக்கள்.. பள்ளி சிறுமியின் வாயில் விஷம் ஊற்றிய இளைஞர் !
அதிர்ச்சியில் கிராம மக்கள்.. பள்ளி சிறுமியின் வாயில் விஷம் ஊற்றிய இளைஞர் !

16 வயது சிறுமியை காதலித்து அவரது வீட்டில் பெண் கேட்டு தராத ஆத்திரத்தில் சிறுமிக்கு விஷம் கொடுத்த இளைஞரின் கொடூர செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே செவல்குளம் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன்(22), அதே ஊரைச் சேர்ந்த 11 ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. வேல்முருகன் திருமணம் செய்வதற்காக அச்சிறுமியின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளார். ஆனால் பெற்றோர் தனது மகளுக்கு 16 வயதே நடப்பதால் பெண் தர மறுத்து திரும்பி அனுப்பியுள்ளனர்.

இதையடுத்து கடந்த டிசம்பர் 28ஆம் தேதியன்று மீண்டும் சிறுமியின் வீட்டிற்கு சென்ற வேல்முருகன், சிறுமியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியுள்ளார். இதற்கு சிறுமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் வீட்டில் யாரும் இல்லாததால் வெளியேபோக கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வேல்முருகன்கையில், ஏற்கனவே எடுத்துச்சென்ற மருந்தை சிறுமியின் வாயில் ஊற்றிவிட்டு வேல்முருகனும் குடித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அருகில் உள்ளவர்கள் இருவரையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.அங்கு சிறுமிக்கும் வேல்முருகன் இருவரும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சிறுமியின் இது குறித்து அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணையில் இறங்கினர். இளைஞர் வேல்முருகன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in

