தனிநபரின் அந்தரங்க உரிமையை மீறுவதா?- அரசின் புதிய ஐ.டி. விதிமுறைகளுக்கு எதிர்ப்பு !!
தனிநபரின் அந்தரங்க உரிமையை மீறுவதா?- அரசின் புதிய ஐ.டி. விதிமுறைகளுக்கு எதிர்ப்பு !!

சா்ச்சைக்குரிய தகவலை யாா் முதலில் அனுப்பினாா் என்பதை சமூக வலைதள நிறுவனங்கள் கட்டாயம் வெளிப்படுத்த வேண்டும் என்ற புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைக்கு எதிா்ப்பு தெரிவித்த வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ளது.
வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் புதிய கொள்ளை முறைகள் குறித்து தொடர்ந்து சர்ச்சை எழுந்து முடிவுபெறாமல் உள்ளது. இந்த நிலையில் தற்போது, சா்ச்சைக்குரிய தகவலை யாா் முதலில் அனுப்பினாா் என்பதை சமூக வலைதள நிறுவனங்கள் கட்டாயம் வெளிப்படுத்த வேண்டும் என்ற மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைக்கு ஃபேஸ் புக், வாட்ஸ்ஆப் நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் அந்நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுவில், தகவலை யாா் முதலில் அனுப்பினாா் என்பதை தெரிவிக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறுவது வாட்ஸ்ஆப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள ஒருவருக்கு ஒருவா் இடையேயான ரகசிய உரையாடல் வாக்குறுதியை மீறுவதாகும். இது தனிநபரின் அந்தரங்க உரிமைக்கும் கருத்து சுதந்திரத்துக்கும் எதிரானதாகும். ஆகையால் இந்த விதிமுறைக்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விதிமுறைகளின் அமலுக்கு தடை கோரி தாக்கலான மனுக்கள் டெல்லி உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.என். படேல், நீதிபதி ஜோதி சிங் அமா்வு முன் விசாரணைக்கு வந்தன. அப்போது மத்திய அரசின் மூத்த வழக்கறிஞ ஆஜராகாத காரணத்தால் இந்த வழக்கை ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரப்பட்டது. இதற்கு மனுதாரா்களின் மூத்த வழக்கறிஞா்கள் ஹரீஷ் சால்வே, முகுல் ரோத்தகி எதிா்ப்பு தெரிவித்தனா்.
இதையடுத்து, ஃபேஸ் புக், வாட்ஸ்ஆப் நிறுவனங்களின் மனுக்களுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கின் அடுத்த விசாரணையை அக்டோபா் 22-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனா்.
newstm.in

