நயன் - விக்கி திருமணத்தில் விதிகள் மீறல்.. மனித உரிமைகள் ஆணையம் முடிவு !!
நயன் - விக்கி திருமணத்தில் விதிகள் மீறல்.. மனித உரிமைகள் ஆணையம் முடிவு !!

நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணத்தின் போது விதிகளை மீறியதாக தொடரப்பட்ட வழக்கில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.
இயக்குநர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். 'நானும் ரவுடிதான்' திரைப்படத்தில் நடித்தபோது இருவரும் காதலிக்க தொடங்கினர். இதனையடுத்து இருவரும் சேர்ந்து பல இடங்களில் சுற்றினர்.
இந்நிலையில் அண்மையில் ரசிகர்களின் நீண்ட நாள் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், தனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் குடும்பத்தார் முன்னிலையில் எளிமையாக நடந்ததாகவும், திருமணம் குறித்து அனைவருக்கும் வெளிப்படையாக அறிவிப்போம் எனவும் நயன்தாரா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த வாரம் கோலாகலமாக நடைபெற்றது. தமிழ்நாடே வியக்கும் வகையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், முக்கிய நடிகர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இதனை அடுத்து திருமணம் முடிந்த அடுத்த நாள் திருப்பதிக்குச் சென்று நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியினர் சுவாமி தரிசனம் செய்தனர். அப்போது நயன்தாரா செருப்பு அணிந்து சென்ற விவகாரம் சரியான நிலையில் விக்னேஸ்வரன் இதற்காக மன்னிப்பு கேட்டதுதையடுத்து இந்த விவகாரம் முடிவுக்கு வந்தது.

திருமணத்தின் போது மகாபலிபுரம் கடற்கரை பகுதியில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. திருமணம் காரணமாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்த நிலையில் சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது . மேலும் திருமணத்திற்கு வருபவர்கள் செல்போன் கொண்டு வரக்கூடாது புகைப்படம் எடுக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. சாதாரண பொதுமக்கள் மகாபலிபுரம் கடற்கரை செல்லாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இப்படி கடும் கட்டுப்பாடுகளோடு நடைபெற்ற திருமணம் தற்போது வேறு ஒரு சிக்கலில் சிக்கி உள்ளது . அதாவது கடற்கரை என்பது பொதுவான இடம் என்பதால் திருமணத்தின் காரணமாக அங்கு ஏன் பொதுமக்களை அனுமதிக்கவில்லை எனவும் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர் சரவணன் என்பவர் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

இந்த புகாரை ஏற்றுக் கொண்டுள்ள மனித உரிமைகள் ஆணையம் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துவதாக தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக விக்னேஷ் சிவன் நயன்தாரா தரப்புக்கும் நோட்டீஸ் அனுப்ப உள்ளதாகவும் கூறப்படுகிறது.
newstm.in

