Theme Check

காவல் நிலையம் அருகே பள்ளி சிறார்கள் வன்முறை.. இருகுழுவினர் மோதலால் பதற்றம்!!

காவல் நிலையம் அருகே பள்ளி சிறார்கள் வன்முறை.. இருகுழுவினர் மோதலால் பதற்றம்!!

காவல் நிலையம் அருகே பள்ளி சிறார்கள் வன்முறை.. இருகுழுவினர் மோதலால் பதற்றம்!!
X

காவல்நிலையம் அருகே 20க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கடும் மோதலில் ஈடுபடும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ளது திருக்குறுங்குடி. இப்பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சுமார் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் திருக்குறுங்குடி காவல் நிலையத்தின் அருகிலேயே கோஷ்டி மோதல்போல் மோதி கொண்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவல் நிலையம் அருகே பள்ளி சிறார்கள் வன்முறை.. இருகுழுவினர் மோதலால் பதற்றம்!!

இரு தரப்பை சேர்ந்த மாணவர்களும் புத்தக பைகளை தூக்கி வீசி சண்டையிட்டுக் கொண்டனர். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் ஏதும் அளிக்கப்படவில்லை. எனினும் வீடியோ பரவியதை அடுத்து இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரவுடிக் கும்பலைப்போல மாணவர்கள் மோதிக்கொள்ளும் வீடியோவால் பெற்றோர்களும், ஆசிரியர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

காவல் நிலையம் அருகே பள்ளி சிறார்கள் வன்முறை.. இருகுழுவினர் மோதலால் பதற்றம்!!

இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி மாணவர்களுக்கு உரிய ஆலோசனை வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

newstm.in

Tags:
Next Story
Share it