கங்குலியின் சாதனையைத் தகர்ப்பாரா விராட் கோலி!! ரசிகர்கள் ஆவல்!!
நாளை இந்திய நேரப்படி அதிகாலை 4மணிக்கு வெலிங்டனில் நியூசிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டிகள் நடக்க இருக்கிறது.நாளை நடைபெற இருக்கும் முதலாவது டெஸ்ட் போட்டியில் 11 ரன்கள் அடிப்பதன் மூலம் இந்திய அணிக்காக அதிக சமதமடித்தவர்களுள் ஒருவரான முன்னாள் கேப்டன் கங்குலியை மிஞ்சுகிறார்.

நாளை இந்திய நேரப்படி அதிகாலை 4மணிக்கு வெலிங்டனில் நியூசிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டிகள் நடக்க இருக்கிறது.
சாமர்த்தியம் மற்றும் அதிரடி ஆட்டங்களால் கிரிக்கெட் ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்திருக்கிறார் இந்திய அணியிண் கேப்டன் கோலி. கிரிக்கெட்டில் உலக அளவில் மிகப்பெரிய ஜாம்பவானான சச்சின் சாதனைகளையே முறியடிக்கும் அளவிற்கு வெறித்தனமாக விளையாடி வருகிறார்.

நாளை நடைபெற இருக்கும் முதலாவது டெஸ்ட் போட்டியில் 11 ரன்கள் அடிப்பதன் மூலம் இந்திய அணிக்காக அதிக சமதமடித்தவர்களுள் ஒருவரான முன்னாள் கேப்டன் கங்குலியை விஞ்சுகிறார்.இந்தியாவிற்காக அதிக சதம் அடித்தவர்களில் முதல் இடத்தைப் பிடித்துள்ளவர் சச்சின் (15921). இரண்டாவது இடத்தில் டிராவிட்டும் (13265), கவாஸ்கர் (10123) மூன்றாவது இடத்திலும், லக்ஷ்மணன் (8781)நான்காவது இடத்திலும், சேவாக் (8503)ஐந்தாவது இடத்திலும், கங்குலி(7212)ஆறாவது இடத்திலும் இருக்கிறார்கள். இந்தப் பட்டியலில் ஆறாவது இடம் பெற்ற கங்குலியை பின்னுக்குத் தள்ள இருக்கிறார் இப்போதைய கேப்டன் விராட் கோலி. இந்தச் சாதனையை காண கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.
newstm.in

