சமந்தாவின் ‘ஓ சொல்றியா மாமா’ பாடலுக்கு விராட் கோலி செம டான்ஸ்.. வைரல் வீடியோ
சமந்தாவின் ‘ஓ சொல்றியா மாமா’ பாடலுக்கு விராட் கோலி செம டான்ஸ்.. வைரல் வீடியோ

தெலுங்கில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரபலமான இயக்குனரான சுகுமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாக மிகப் பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் தான் புஷ்பா. இந்த படம் இந்தியாவின் 5 மொழிகளில் வெளியாகி பல்வேறு ரசிகர்களின் மத்தியில் சிறப்பான வெற்றியை பெற்றது.
இந்த படத்தில் இடம் பெற்ற ஒரு ஐட்டம் சாங்கிற்கு, நடிகை சமந்தா மிகவும் கவர்ச்சியாக நடனம் ஆடி அனைவரையும் கிரங்கடித்தார். நடிகை சமந்தாவின் கவர்ச்சி நடனம் இணைந்து, இந்த பாடலை மேலும் குளு குளுனு repeat mode-ல கேட்க தூண்டியிருக்கிறது என்றே சொல்லலாம்.

தொடர்ந்து, இந்த பாடலுக்கு திரைபிரபலங்கள் மட்டுமல்லாமல் கிரிக்கெட் வீரர்கள் பலரும் டான்ஸ் ஆடி இணையத்தில் பதிவிட்டு வந்தார். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் விராத் இந்த பாடலுக்கு டான்ஸ் ஆடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
இதையடுத்து ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரரும், புதுமாப்பிள்ளையுமான கிளென் மேக்ஸ்வெல்லுக்கு, அந்த அணியின் நிர்வாகம் வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றை நேற்று ஏற்பாடு செய்திருந்தது. இதில் அந்த அணி வீரர்கள் தினேஷ் கார்த்திக், விராட் கோலி உள்பட பலரும் சமந்தாவின் ‘ஊ சொல்றியா..’ , ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் பாடலுக்கு நடனமாடிய காட்சிகள் வைரலாகி வருகிறது. விராட் கோலி, தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் கலந்துகொண்ட நிலையில், இருவரும் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டரான கிளென் மேக்ஸ்வெல் தற்போது ஆர்சிபி அணிக்காக விளையாடி வருகிறார். இவர், தமிழ் குடும்பத்தில் பிறந்து ஆஸ்திரேலியாவில் வளர்ந்த பெண்ணான வினி ராமனை நீண்ட நாளாக காதலித்து வந்தநிலையில், கடந்த மாதம் அவரை கரம்பிடித்தார். இதனால், இந்த சீசனின் முதல் சில போட்டிகளில் கலந்துகொள்ளாதநிலையில், தற்போது அணியில் இணைந்து விளையாடி வருகிறார்.
🤩❤️🔥💥 #Pushpa #OoAntavaOoOoAntava https://t.co/AILiUBeato
— Pushpa (@PushpaMovie) April 28, 2022
newstm.in

