முதலிடத்தை இழந்தார் விராட் கோலி
நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 21 ரன்கள் மட்டுமே எடுத்த விராட் கோலி, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் ஐசிசி தரவரிசையில் தனது முதலிடத்தை இழந்துள்ளார்.ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்தை பிடித்தார். இந்திய வீரர்கள் ரஹானே 8, புஜாரா 9, மயங்க் அகர்வால் 10-வது இடத்திலும் உள்ளனர்.

நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 21 ரன்கள் மட்டுமே எடுத்த விராட் கோலி, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் ஐசிசி தரவரிசையில் தனது முதலிடத்தை இழந்துள்ளார்.
ஐசிசி-யின் டெஸ்ட் போட்டிக்கான பேட்ஸ்மேன் தரவரிசையில் முதல் இடத்தை பிடிக்க ஸ்மித், விராட் கோலி இடையே கடும் போட்டி நிலவி வந்தது. வங்காளதேசம் அணிக்கெதிராக தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ஸ்மித்யை பின்னுக்குத்தள்ளி விராட் கோலி முதல் இடத்தை பிடித்தார்.இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் விராட் கோலி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் 2-வது இடத்திற்கு சரிந்து, ஸ்டீவ் ஸ்மித் முதல் இடத்தை பிடித்துள்ளார். முதலிடத்தை அவர் எட்டாவது முறையாகக் கைப்பற்றியுள்ளார்.2015-ம் ஆண்டு ஜூன் மாதம் டெஸ்ட் தரவரிசையில் ஆஸி. வீரர் ஸ்மித் முதலிடத்தைப் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பேட்ஸ்மேன்கள் தரவரிசை(டெஸ்ட்)
1. ஸ்மித்(911 புள்ளிகள்)
2. கோலி (906 புள்ளிகள்)
3. வில்லியம்சன் (853 புள்ளிகள்)
4. மார்னஸ் லபுஷேன் (827 புள்ளிகள்)
5. பாபர் அஸாம் (800 புள்ளிகள்)
6.டேவிட் வார்னர் (793 புள்ளிகள்)
7.ஜோ ரூட் (764 புள்ளிகள்)
8.ரஹானே (760 புள்ளிகள்)
9. புஜாரா (757 புள்ளிகள்)
10.மயங்க் அகர்வால் (727 புள்ளிகள்)
newstm.in

