விருதுநகர் பாலியல் வன்கொடுமை – 6 நாட்கள் சிபிசிஐடி விசாரணை!!
விருதுநகர் பாலியல் வன்கொடுமை – 6 நாட்கள் சிபிசிஐடி விசாரணை!!

விருதுநகரில் 22 வயது பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஹரிஹரன், ஜூனத் அகமது, மாடசாமி, பிரவீன் மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் என மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டனர். சிறுவர்கள் ராமநாதபுரம் கூர்நோக்கு இல்லத்திலும், மற்ற 4 பேர் மதுரை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை தமிழக அரசின் உத்தரவை தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது. 8 பேர் மீது சிபிசிஐடி போலீசார் 7 பிரிவுகளின் கீழ் புதிதாக வழக்குப்பதிவு செய்தனர்.

வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 4 பேரை சிபிசிஐடி போலீஸ் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிடப்பட்டது. இதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வன்கொடுமை தடுப்பு நீதி மன்றத்தில் சிபிசிஐடி தரப்பில் மனு தாக்கல் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து நால்வரையும் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டனர். அவர்களை காவலில் எடுத்து விசாரணை செய்வதற்காக போடப்பட்ட மனுவின் மீதான விசாரணை நடைபெற்றது.
நால்வரையும் வரும் ஏப்ரம் 4 ஆம் தேதி மாலை வரை 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து 4 பேரும் விருதுநகர் சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
newstm.in

