Theme Check

ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா வருவோருக்கு விசா முறையில் சலுகை !!

ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா வருவோருக்கு விசா முறையில் சலுகை !!

ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா வருவோருக்கு விசா முறையில் சலுகை !!
X

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றியுள்ள நிலையில் அங்கு தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது. அதிபர் அஷ்ரப் கானி ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்காவுக்கான தூதரக அதிகாரிகளும் வெளியேறியுள்ள நிலையில் பல நாடுகளைச் சேர்ந்த தூதரக அதிகாரிகள் சிக்கிக் கொண்டுள்ளனர். அவர்களை மீட்பதற்கான நடவடிக்கை தொடர்கிறது.

mea

இந்நிலையில் காபூலில் சிக்கியிருந்த இந்திய அதிகாரிகள், தூதரக ஊழியர்கள், செய்தியாளர்கள் உள்ளிட்ட 140க்கும் மேற்பட்டோர் இந்திய விமானப்படை விமானம் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா வருவதற்கான விசா கட்டுப்பாடுகளை மத்திய உள்துறை அமைச்சகம் தளர்த்தி உள்ளது. மின்னணு முறையில் அவசரகால விசா பெறும் புதிய நடைமுறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதையடுத்து இந்தியாவுக்கான விசாவில் மாற்றங்களை மத்திய உள்துறை அமைச்சகம் கொண்டு வந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து பதற்றமான நிலை தொடர்வதால் அங்கிருந்து வரும் மக்களை உலக நாடுகள் ஆதரிக்க வேண்டும் என ஐநா சபை தெரிவித்துள்ளது.

newstm.in


Tags:
Next Story
Share it