Theme Check

விவேக் பட பாணியில் பெண் காவல் அதிகாரியிடம் ரகளை!!

விவேக் பட பாணியில் பெண் காவல் அதிகாரியிடம் ரகளை!!

விவேக் பட பாணியில் பெண் காவல் அதிகாரியிடம் ரகளை!!
X

நடிகர் விவேக் பட காமெடி போல பெண் உதவி ஆய்வாளர் தோளில் கை போட்டு ஆபாசமாக ரகளையில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் மகளிர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் பெண் உதவி ஆய்வாளர் ஆண் போல முடி வெட்டிக்கொண்டு, ஆடையும் அணிந்திருந்தார்.

அவர் ஜீன்ஸ் பேண்ட், டிசர்ட் அணிந்து தனது தோழியுடன் நுங்கம்பாக்கம் பகுதியில் மோர் குடித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு மதுபோதையில் நின்றிருந்த 3 இளைஞர்கள், பெண் உதவி ஆய்வாளர் தோளின் மீது கை போட்டு, இவனை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு என கூறியுள்ளனர்.

arrest

அதற்கு உதவி ஆய்வாளர் தாம் பெண் எனவும், காவல் உதவி ஆய்வாளராக இருந்து வருவதாகவும் அவர்களிடம் தெரிவித்துள்ளார். அதற்கு பெண் என நம்ப முடியவில்லை எனவும், உதவி ஆய்வாளர் என எப்படி நம்புவது என பெண் உதவி ஆய்வாளரை கிண்டலடித்து உள்ளனர்.

மேலும் பெண் உதவி ஆய்வாளரின் உடலமைப்பை ஆபாசமாக வர்ணித்தும், கேலி கிண்டலும் செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பெண் உதவி ஆய்வாளர் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார்.

தகவலின் பேரில் நுங்கம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பெண் உதவி ஆய்வாளரிடம் ரகளையில் ஈடுபட்ட மூன்று போதை ஆசாமிகளையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.

arrest 1

அதில் அவர்கள் தேனாம்பேட்டையை சேர்ந்த செல்வகுமார், கல்லூரி மாணவர் நரேஷ், மந்தைவெளியை சேர்ந்த விக்னேஷ் என தெரியவந்தது. மேலும் போதையில் ரகளையில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்தனர்.

"காதல் கிசு கிசு" என்ற தமிழ் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் விவேக் போக்குவரத்து விதிகளை மீறியதாக போலீசாரிடம் சிக்குவார். அப்போது ஆண் போல இருக்கும் பெண் போலீசாருக்கு லஞ்சம் கொடுப்பது போல சிக்கி கொண்டு கதறுவார்.

கைதான 3 பேர் மீதும் பெண் வன்கொடுமை சட்டம் உட்பட 5 பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

newstm.in

Next Story
Share it