அரண்மனை 3 படத்தில் விவேக்! பர்ஸ்ட் லுக் வெளியீடு!
அரண்மனை 3 படத்தில் விவேக்! பர்ஸ்ட் லுக் வெளியீடு!

தமிழ் திரையுலகில் தனது தனிப்பட்ட இயக்கத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குநர் சுந்தர் .சி. இவர் நடிகை குஷ்புவின் கணவர். தற்போது சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி உள்ள அரண்மனை படத்தின் மூன்றாம் பாகத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
சமூக திகில் படமான ‘அரண்மனை’ பேய் படம் இதுவரை 2 பாகங்கள் வெளிவந்துள்ளன.இவை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதுடன் வசூலிலும் சாதனை நிகழ்த்தியது. இந்நிலையில், தற்போது அரண்மனை படத்தின் 3ம் பாகம் தயாராகி உள்ளது. இந்த படத்தின் கதாநாயகன் ஆர்யா. ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால் ஆகிய 3 கதாநாயகிகள் இணைந்து கலக்கியுள்ளனர்.

இவர்களுடன் சமீபத்தில் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக், யோகிபாபு ஆகியோரும் காமெடி வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் இசையமைப்பாளர் சத்யா. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.சுந்தர் சி, ஆர்யா, விவேக், ஆண்ட்ரியா, ராஷி கண்ணா, யோகிபாபு அனைவரும் இணைந்த தோற்றத்தில் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.

