Theme Check

தமிழ்நாட்டில் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான தொழிற்கல்வி பாடம் ரத்து..!!

தமிழ்நாட்டில் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான தொழிற்கல்வி பாடம் ரத்து..!!

தமிழ்நாட்டில் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான தொழிற்கல்வி பாடம் ரத்து..!!
X

அதிமுக ஆட்சியில், கடந்த 2018-2019 ஆம் ஆண்டு 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்கல்வி பாடம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒன்றிய அரசு நிதியில் கடந்த 2018-ம் ஆண்டு 67 அரசு மேல்நிலைப்பள்ளிகளில், ரூ.3.55 கோடியில் தொழிற்கல்வி திட்டம் செயல்படுத்த தமிழ்நாடு அரசு அறிவித்து அதற்கான அரசாணை வெளியிட்டது. அதன்படி, தையல், அழகுக்கலை, வேளாண் பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.

school

இந்நிலையில் தமிழ்நாட்டில் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான தொழிற்கல்வி பாடம் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. நடப்பு கல்வியாண்டில் 9-ம் வகுப்பு முடித்து, 10-ம் வகுப்புக்கு செல்லும் மாணவர்களுக்கு மட்டும் தொழிற்கல்வி பாடம் இருக்கும். வரும் கல்வியாண்டில் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ள 5 பாடங்களே இருக்கும்.

DPI

அதன்படி டெய்லரிங், பியூட்டிஷியன், வேளாண்மை பொறியியல், பொது இயந்திரவியல், மின்சாதனங்களும் பழுதுபார்த்தலும், ஆடை வடிவமைத்தலும் தயாரித்தல் ஆகிய பாடங்கள் வரும் கல்வியாண்டு முதல் நிறுத்தப்படுகிறது.

Next Story
Share it