வாய்ஸ் மெசெஜ்.. வாட்ஸ்அப் நிறுவனம் கொடுத்த புதிய அப்டேட் !
வாய்ஸ் மெசெஜ்.. வாட்ஸ்அப் நிறுவனம் கொடுத்த புதிய அப்டேட் !

உலகம் மற்றும் இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ்அப் (WhatsApp) செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இவர்களின் தனியுரிமை விதிமுறைகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய பொறுப்பு வாட்ஸ்அப்-க்கு உள்ளது. பொறுப்பை நிறைவேற்றும் வகையில் privacy-ல் புதிய அப்டேட்டை மெட்டாவுக்கு சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனம் கொண்டு வந்துள்ளது.

இதோடுமட்டுமல்லாமல் அவ்வப்போது பயனர்களின் தேவைக்கு ஏற்ப புதிய அப்டேட்களை வாட்ஸ்அப் நிறுவனம் அளித்து வருகிறது. அவ்வகையில் தற்போது வாட்ஸ்அப்பில் ஒலி அமைப்பில் செய்தி அனுப்பும் வாய்ஸ் மெசேஜிங்கில் புதிய அப்டேட் ஒன்றினை கொடுத்துள்ளது.
அதன்படி வாய்ஸ் மெசெஜுக்காக பதிவு செய்யப்பட்டதை சரிபார்க்கும் preview வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் தவறான செய்திகள் அனுப்பப்படுவதை தவிர்க்கலாம் எனக் கூறப்பட்டிருக்கிறது.

இந்தப் புதிய வசதி iOS, Android, Whats app web என அனைத்து தளங்களிலும் இயங்கும் எனவும் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னதாக வாய்ஸ் மெசெஜ் சாட்களை 1.5x அல்லது 2x வேகத்திலும் கேட்கும் வசதி ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
They’re not mistakes, they’re rehearsals. Now you can preview your voice messages before you hit send. pic.twitter.com/ohnEVrGTvD
— WhatsApp (@WhatsApp) December 14, 2021
newstm.in

