Theme Check

இனி 17 வயது முடிந்ததும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு!.. தேர்தல் ஆணையம் முடிவு!!

இனி 17 வயது முடிந்ததும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு!.. தேர்தல் ஆணையம் முடிவு!!

இனி 17 வயது முடிந்ததும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு!.. தேர்தல் ஆணையம் முடிவு!!
X

17 வயது நிறைவடைந்தவர்களை வாக்காளர்களாக சேர்க்கும் திட்டத்தை, பள்ளி அளவில் செயல்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1ம் தேதியை தகுதி நாளாக கொண்டு 18 வயது நிறைவடைந்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் விதமாக, தேர்தல் ஆணையம் வாக்காளர் சரிபார்க்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. 18 வயது நிறைவடைந்தவர்கள், படிவம் 6 மற்றும் ஆவணங்களை சமர்ப்பித்து, வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். இந்நிலையில், தேர்தல் ஆணையத்தால் அமைக்கப்பட்ட செயற்குழுக்களில் நடந்த விவாதங்களின் அடிப்படையில், புதிய திட்டங்களை செயல்படுத்த தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது.
இனி 17 வயது முடிந்ததும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு!.. தேர்தல் ஆணையம் முடிவு!!

அதன்படி, 17 வயது பூர்த்தியாகி 18 வயதை தொடும்போதே வாக்காளர் பட்டியலில், எளிதாக பெயரை பதிவு செய்யும் திட்டம் கொண்டுவரப்படுகிறது. அந்த வகையில், பள்ளி, கல்லூரிகள் மூலம், ஆன்லைனில் பதிவு செய்ய வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்கும் வகையில் விழிப்பணர்வு ஏற்படுத்தவும், புதிய வாக்காளர்களை அடையாளம் காண்பதற்கும், இம்முறை கொண்டு வரப்படுவதாக கூறப்படுகிறது. இதற்கான அனுமதியை பெற மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it