Theme Check

தடுப்பூசி போடாவிட்டால் ஊதிய உயர்வு, சலுகைகள் ரத்து: ஊழியர்கள் அதிர்ச்சி..!

தடுப்பூசி போடாவிட்டால் ஊதிய உயர்வு, சலுகைகள் ரத்து: ஊழியர்கள் அதிர்ச்சி..!

தடுப்பூசி போடாவிட்டால் ஊதிய உயர்வு, சலுகைகள் ரத்து: ஊழியர்கள் அதிர்ச்சி..!
X

தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் வேலைக்கு திரும்பும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, கமிஷன் உள்ளிட்ட எந்தவித சலுகைகளும் கிடைக்காமல் செய்வதற்கான நடவடிக்கைகளை சில நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளது ஊழியர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பல ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணி செய்வதற்கான அனுமதி வழங்கி இருந்தன. கொரோனா இரண்டாவது அலையின் போதும் இதே நிலை நீடித்தது. அப்போது தடுப்பூசியின் தேவை அனைவருக்கும் புரிந்தது.

இதனால் நாட்டிலுள்ள பலரும் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனர். தகவல் தொழில்நுட்ப துறை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டால், அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் அலுவலகங்களை திறந்துவிடலாம் என நிறுவனங்கள் எண்ணுக்கின்றன. ஊழியர்களின் மொத்த எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஒருவர் இருந்துவிட்டால் கூட அது பிரச்னையை ஏற்படுத்திவிடக்கூடும் என்பதே இதற்கு காரணம்.

தடுப்பூசி போட்டுக்கொள்வது சட்டப்படி கட்டாயம் கிடையாது. அது அவரவர் சொந்த விருத்திற்கானது. ஆனால் நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றன. அப்படி தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஊழியர்களின் சம்பள உயர்வு, சம்பள பிடித்தம், போனஸ் போன்ற சலுகைகளை ரத்து செய்யும் நடவடிக்கைகளில் சில நிறுவனங்கள் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் சில நிறுவனங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஊழியர்களுக்கு கெடு விதித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் பல்வேறு பன்நாட்டு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். தற்போதை நிலையில் இருந்து மாறுவதற்கு தடுப்பூசி மட்டுமே தீர்வு என நிறுவனங்கள் எண்ணுவதே இதற்கு காரணமாகவுள்ளது.

Tags:
Next Story
Share it