Theme Check

குழந்தை வேணுமா? ஆன்லைனில் அப்ளை பண்ணுங்க…

குழந்தை தத்தெடுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். குழந்தை தத்தெடுப்பதற்கு மொத்தம் 46 ஆயிரம் ரூபாய் இருந்தால் போதும். மாநில அரசல் அங்கிகரிக்கப்பட்ட 21 முகமைகள் உண்டு. இங்கிருக்கும் குழந்தைகளை விண்ணப்பத்தின் மூலம் தத்தெடுத்துகொள்ளலாம்.இதற்கு ஆகும் காலம் 10 மாதங்கள் ஆகும்.

குழந்தை வேணுமா? ஆன்லைனில் அப்ளை பண்ணுங்க…
X

குழந்தை பிரச்சனையை அனுபவிக்கும் தம்பதியரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அதற்கேற்ப இன்று குழந்தையின்மை மருத்துவ மனையும் அதிகரித்துவருகிறது. குழந்தையின்மை சிகிச்சைக்கு இலட்சக் கணக்கில் பணம் செலவாகிறது என்றாலும் கூட மேல்தட்டு நடுத்தர வர்க்கம், நடுத்தர வர்க்கத்தை சார்ந்தவர்கள் சிகிச்சை எடுத்துகொண்டு வருகீறார்கள்.

இதில் குழந்தை பேறும் கிட்டுவதும் உண்டு. சில நேரங்களில் சிகிச்சை செய்த பிறகும் கூட குழந்தை பேறு கிட்டாமல் போய்விடுவதும் உண்டு. இந்த தம்பதியரில் பலர் குழந்தை தத்தெடுப்பதையும் மேற்கொள்கிறார்கள். அப்படி செய்யும் போது அவர்கள் செய்யும் தவறு அரசு வழியில் செல்லாமல் புரோக்கர்களை நம்பி ஏமாறுவதுதான். இதனால் தான் தமிழகத்தில் நாளுக்கு நாள் குழந்தை விற்பனை அதிகரித்துவருகிறது.

குழந்தை வேணுமா? ஆன்லைனில் அப்ளை பண்ணுங்க…

குழந்தையில்லாமல் தவிக்கும் தம்பதியர் வழிதெரியாமல் சட்டபடி அணுகாமல் திருட்டுத்தனமாக இலட்சக்கணக்கில் பணத்தை கொடுத்து குழந்தையை பெற நினைக்கிறார்கள். குழந்தையை தத்தெடுத்து வளர்க்க பல விதிமுறைகளை அரசு நிர்ணயித்துள்ளது. இந்த விதிமுறைப்படிதான் குழந்தையை தத்தெடுக்க வேண்டும். இந்த முறையில் பதிவு செய்து குழந்தையை தத்தெடுப்பதற்கு குறைவான செலவு தான் ஆகிறது. ஆனால் பலரும் இது நடைமுறையில் அதிக சிக்கலையும் நேர விரயத்தையும் உண்டாக்குகிறது என்று நினைக்கிறார்கள்.


தற்போது குழந்தை தத்தெடுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். குழந்தை தத்தெடுப்பதற்கு மொத்தம் 46 ஆயிரம் ரூபாய் இருந்தால் போதும். மாநில அரசல் அங்கிகரிக்கப்பட்ட 21 முகமைகள் உண்டு. இங்கிருக்கும் குழந்தைகளை விண்ணப்பத்தின் மூலம் தத்தெடுத்துகொள்ளலாம்.இதற்கு ஆகும் காலம் 10 மாதங்கள் ஆகும். குழந்தைகளை தத்தெடுக்க விரும்புபவர்கள் வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட 11 ஆவணங்களை அளிக்க வேண்டும். இவை எல்லாம் சரியாக இருக்கும்பட்சத்தில் தம்பதியருக்கு உண்மையிலேயே குழந்தை தேவை இருக்கிறதா என்பதையும் கவனித்து அனுமதிக்கபடுவார்கள். அதே நேரம் குழந்தையிடமும் சம்மதம் கேட்பார்கள். இனி குழந்தையை தத்தெடுக்க விரும்புபவர்கள் குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு ஆணையத்தை அணுகுங்கள்.

newstm.in

Tags:
Next Story
Share it