Theme Check

எச்சரிக்கை! ஒரு நாளைக்கு 8 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்பு!!

எச்சரிக்கை! ஒரு நாளைக்கு 8 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்பு!!

எச்சரிக்கை! ஒரு நாளைக்கு 8 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்பு!!
X

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 8 லட்சம் வரை எட்டும் என்று ..டி. பேராசிரியர் மனீந்திர அகர்வால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று புதிதாக 1,17,100 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட 28 சதவீதம் அதிகம்.

இதில் மகாராஷ்டிராவில் மட்டும் 36,265 பேர் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதனிடையே, இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்புகள் 4 முதல் 8 லட்சம் வரை உச்சம் அடையலாம் என்று ..டி. பேராசிரியர் மனீந்திர அகர்வால் தெரிவித்துள்ளார்.

ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியில் சுமார் 10 நாட்களில், மும்பை மற்றும் டெல்லியில் தினசரி கொரோனா பாதிப்புகள் உச்சத்தை எட்டும். ஆனால் இந்த அலை மார்ச் மாதத்திற்கு பிறகு நீடிக்கும் என்று கூறமுடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

omicron

டெல்லி மற்றும் மும்பை ஆகிய இரு நகரங்களிலும், தினசரி பாதிப்பு 30,000 முதல் 50,000 வரை பதிவாகலாம். இதனால் இந்த மாதத்தின் இறுதியில், இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் உச்சத்தை எட்டும். நாடு முழுவதும் சுமார் 4 முதல் 8 லட்சம் தினசரி பாதிப்புகள் காணப்படலாம் என கூறியுள்ளார்.

கடுமையான ஊரடங்கு மூலம், 3ஆவது அலையை தாமதப்படுத்தலாம். எனினும், கொரோனா பரவும் வாய்ப்புகள் உள்ளன. கொரோனா பாதிப்புகள் அதிகரித்தாலும், சுகாதாரத்துறைக்கு அது சுமையாக இருக்காது என தெரிவித்துள்ளார்.

omicron

ஏனெனில், ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தாலும், மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்த சதவீதத்திலேயே இருக்கும். ஒமைக்ரான் மாறுபாடு வேகமாக பரவுவதால், இந்தியாவில் ஜனவரி இறுதியில் கொரோனா உச்சம் அடைந்து, மார்ச் மாதத்தில் முழுவதும் குறைந்து காணப்படும் என தெரிவித்துள்ளார்.

newstm.in

Next Story
Share it