Theme Check

எச்சரிக்கை! விதிமுறைகளை மீறி இயங்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை!!

எச்சரிக்கை! விதிமுறைகளை மீறி இயங்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை!!

எச்சரிக்கை! விதிமுறைகளை மீறி இயங்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை!!
X

அரசின் விதிமுறைகளை மீறி விடுமுறை காலங்களில் வகுப்புகளை நடத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி ஆட்சியர் சிவராசு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களின் 30% சிறப்புத் தள்ளுபடி விற்பனையையும், சிறப்பு கைத்தறிக் கண்காட்சி மற்றும் விற்பனையினையையும், திருச்சி இந்திய மருத்துவ மன்ற வளாகத்தில் ஆட்சித்தலைவர் சு.சிவராசு தொடங்கிவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருச்சியில் கொரோனா முதல் தவணை தடுப்பூசி 87 விழுக்காடும், இரண்டாவது தவணை தடுப்பூசி 58 விழுக்காடும் போடப்பட்டுள்ளது என்று கூறினார்.

trc

இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாத அனைவரும் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். ஒமைக்ரான் பாதிப்பு கடுமையாக இல்லை. அதே சமயம் ஒமைக்ரான் வேகமாகப் பரவக் கூடியதாக இருக்கிறது என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், அரசின் விதிமுறைகளை மீறி விடுமுறை காலங்களில் வகுப்புகளை நடத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 50 விழுக்காட்டினர் முக கவசம் அணிந்து கொள்ளாதவர்களாக இருப்பது வேதனையளிக்கிறது என தெரிவித்தார்.

mask

அனைவரும் முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும். நோய்தொற்று பரவலை கணக்கில் கொண்டு, ஊரடங்கு தளர்வுகளை அதிகமாக்குவதா குறைப்பதா என்பதனை மாநில அரசு முடிவு செய்யும் என்றார்.

கண்காட்சியில் அனைத்து வகையான பட்டு சேலைகள், பட்டு வேஷ்டிகள், போர்வைகள், தலையணை உறைகள், அலங்கார பொருட்கள், ஜமுக்காளம் உள்ளிட்ட பல்வேறு வகையான கைத்தறி துணிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. அனைத்து துணி வகைகளுக்கும் 30 விழுக்காடு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it