எச்சரிக்கை! தமிழகத்தில் கனமழை தொடரும்!!
எச்சரிக்கை! தமிழகத்தில் கனமழை தொடரும்!!

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழையும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நாளை கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இன்று முதல் வரும் 3ம் தேதி வரை குமரிக்கடல் பகுதியில் மணிக்கு 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால், மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
newstm.in

