Theme Check

எச்சரிக்கை! யாரும் வெளியே வராதீங்க!!

எச்சரிக்கை! யாரும் வெளியே வராதீங்க!!

எச்சரிக்கை! யாரும் வெளியே வராதீங்க!!
X

வெப்ப அலைகள் அதிகளவில் இருப்பதால் தெலுங்கானாவில் மக்கள் மதியம் 12 முதல் 4 மணி வரை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் பொதுவாக ஏப்ரல் மாதத்தில் அதிகரிக்கும் வெப்பம் இந்த ஆண்டு பிப்ரவரி மாத பாதியிலேயே அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. இதனால் பல பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக தெலங்கானா, ஹைதராபாத் ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் வெப்ப அலைகள் உள்ளது. எனவே, அம்மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை கொடுத்துள்ளது.

hot

வெப்ப அலை அதிகம் இருக்கும் என்பதால் தெலங்கானா மாநில மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் மதியம் 12 மணி முதல் 4 மணிவரை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அதே போல் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் இப்போதில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளது. எனவே, மக்கள் பொதுவாக மதிய வேளையில் வெளியே செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

newstm.in

Next Story
Share it