Theme Check

எச்சரிக்கை! அடுத்த 38 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் உள்ளது!!

எச்சரிக்கை! அடுத்த 38 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் உள்ளது!!

எச்சரிக்கை! அடுத்த 38 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் உள்ளது!!
X

கோடை முடிந்து ஜூன் மாதம் மழை பெய்யாததால் மும்பையில் அடுத்த 38 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் உள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.

மும்பை கார்ப்பரேஷனின் தரவுகளின் படி ஒட்டுமொத்த குடிநீர் இருப்பு 10%க்கும் கீழ் குறைந்துள்ளது. குடிநீர் வழங்கும் 7 ஏரிகள் மழை இல்லாத காரணத்தால் நிரம்பவில்லை. அதனால் அடுத்த 38 நாட்களுக்கு மட்டுமே தற்போது உள்ள நீர் போதுமானதாக இருக்கும்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் இதே நேரத்தில் 2 லட்சம் மில்லியன் லிட்டர் அதாவது 15%க்கும் மேல் நீர் இருப்பு இருந்தது. ஆனால் தற்போது 1.43 லட்சம் மில்லியன் லிட்டம் நீர் மட்டுமே உள்ளது. அதாவது 9.89 சதவீதம்.

water

மும்பை மக்கள் நாள் ஒன்றுக்கு 3,750 மில்லியன் லிட்டர் நீரை பெறுகின்றனர். இந்த ஆண்டு முழுவதுமான தண்ணீர் தேவைக்கு அக்டோபர் 1ஆம் தேதிக்குள் மும்பைக்கு 14.47 லட்சம் மில்லியன் லிட்டர் தண்ணீர் இருப்பு தேவை.

மும்பையில் ஜூன் 11ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்குவதாக இந்திய வானிலை மையம் அறிவித்தது. ஆனால் இப்போது வரை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்யவில்லை. இதனால் மக்கள் தண்ணீர் இருப்பு குறைந்து வருவதை நினைத்து கவலையில் உள்ளனர்.

newstm.in

Next Story
Share it