Theme Check

சென்னை வருவோருக்கு எச்சரிக்கை.. இன்று முதல் கட்டுப்பாடு..!

சென்னை வருவோருக்கு எச்சரிக்கை.. இன்று முதல் கட்டுப்பாடு..!

சென்னை வருவோருக்கு எச்சரிக்கை.. இன்று முதல் கட்டுப்பாடு..!
X

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே, தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர் உள்பட 3 பேர் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் வெளிநாடுகளில் இருந்து பெங்களூருவுக்கு வந்திருந்த 5 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனால், கர்நாடகத்தில் ஒமைக்ரான் வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது.

இதையடுத்து, கர்நாடகாவில் ஒமைக்ரான் வைரஸ் பரவுவதை தடுக்க, வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் கட்டாயமாக கொரோனா பரிசோதனை நடத்தப்படுவதுடன், வெளிநாட்டு பயணிகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் விமான நிலையத்தில் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், அதிக பாதிப்பு கொண்ட நாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகள், கொரோனா பரிசோதனை மேற்கொள்ள இன்று முதல் முன்பதிவு செய்வது கட்டாயம் என்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

Next Story
Share it