திருமண வரன்களை தடுப்பவர்களை எச்சரித்து நோட்டீஸ்!!
திருமண வரன்களை தடுப்பவர்களை எச்சரித்து நோட்டீஸ்!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே திருமண வரன்களை தடை செய்பவர்களை எச்சரித்து நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
திருமண வரன்களை கெடுத்து விடும் சிலரால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள், தங்கள் மனக் குமுறல்களை வெளிப்படுத்தும் விதத்தில் வரன்களை தடுக்கும் நல் உள்ளங்களுக்கு நன்றி, இப்படிக்கு திருமணம் ஆகாத வாலிபர்கள் சங்கம் என்று பேனர் வைப்பதும், போஸ்டர் ஒட்டுவதுமாக இருந்து வந்தனர்.
கடந்த 2021ஆம் ஆண்டு கருங்கல் ஆயினிவிளை பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் ஒருபடி மேலே போய் அந்த பகுதியில் பலசரக்கு கடை நடத்தும் நபர் ஒருவரின் புகைப்படத்துடன் போஸ்டர் அடித்து ஒட்டி தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

தற்போது கருங்கல் அடுத்த பாலவிளை பகுதியை சேர்ந்த இளைஞர்கள் வரன்களை தடுக்கும் ஆசாமிகள் வீட்டில் உள்ள பெண்களையே வரனாக கேட்கும் விதத்தில் வில்லங்க போஸ்டர் ஒன்றை அடித்து தெருவுக்கு தெரு பயணிகள் நிழல் குடை, குட்டி சுவர் என வரன்களை கெடுக்கும் ஆசாமிகள் அச்சப்படும் அளவுக்கு ஒட்டியுள்ளனர்.

அதில் திருமண வரன்களை தடை செய்பவர்கள் கவனத்திற்கு தடை செய்பவர்கள் அவர்களின் மகள் அல்லது மருமகளை திருமணம் செய்து கொடுப்பதாக இருந்தால் மட்டடும் தடை செய்யட்டும். சில நபர்களின் அடையாளம் தெரியும் அடுத்த போஸ்டரில் அவர்களின் புகைப்படம் வைக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வில்லங்க போஸ்டர் விவகாரம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படும் நிலையில், இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in

