Theme Check

எச்சரிக்கை.. இந்த முகக் கவசங்கள் ஒமைக்ரானில் இருந்து பாதுகாக்காது..!

எச்சரிக்கை.. இந்த முகக் கவசங்கள் ஒமைக்ரானில் இருந்து பாதுகாக்காது..!

எச்சரிக்கை.. இந்த முகக் கவசங்கள் ஒமைக்ரானில் இருந்து பாதுகாக்காது..!
X

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் விரிவான தொகுப்பின் ஒரு பகுதியாக முகக் கவசங்களை பயன்படுத்துமாறு உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்துகிறது.

அதே உலக சுகாதார அமைப்பானது, கடந்த டிசம்பர் 2020-ல் வெளியிட்ட அதன் வழிகாட்டுதல்களில், ஒரு முகக்கவசம், அது சரியாகப் பயன்படுத்தப்பட்டாலும் கூட, போதுமான பாதுகாப்பையோ அல்லது மூலக் கட்டுப்பாட்டையோ வழங்க போதுமானதாக இல்லை என்று தெரிவித்துள்ளது.

ஆனால், முகக்கவசத்தை சரியான சுத்திகரிப்புப் பழக்கங்களுடன் இணைத்துக்கொள்வது வைரஸைத் தடுக்க உதவும். கோவிட்-19 தொற்று நோய்க்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்போது பல்வேறு வகையான முகக்கவசங்கள் பயன்பாட்டில் உள்ளன.
WHO எச்சரிக்கை..! ஓமிக்ரான் தொற்றில் இருந்து துணி மாஸ்க்குகள் உங்களை  பாதுகாக்காது | coronavirus omicron infection no cloth masks are not your  armor against covid – News18 Tamil
நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான யு.எஸ் மையங்கள் பின்வரும் வகைகளில் முகக்கவசங்களை வகைப்படுத்தியுள்ளன: பருத்தி அல்லது செயற்கை துணியால் செய்யப்பட்ட துணி முகக்கவசங்கள்; 3 அடுக்கு பாதுகாப்புகளை கொண்ட சர்ஜிக்கல் அல்லது டிஸ்போஸபிள் மாஸ்க்குகள்; நான்கு அல்லது ஐந்து அடுக்குகளாலான வளைந்த வடிவமைப்பை கொண்ட ரெஸ்பிரேட்டர்ஸ் அல்லது கேஎன்95 போன்ற நான்-மெடிக்கல் மாஸ்க்குகள்.

"துணியால் ஆன முகக்கவசத்தை ஒருவர் அணிந்திருக்கும் பட்சத்தில் அவர் பேசும் போதோ, ​​இருமல் அல்லது தும்மலின் போதோ அவர் வெளியேற்றும் சுவாசத் துளிகளை வெளிவிடாமல் பார்த்துக் கொள்கிறது. அதுமட்டுமின்றி, துணி மாஸ்குகள் ஆனது அணிந்திருப்பவர்களை, மற்றவர்கள் வெளியிடும் நீர்த்துளிகளை உள்ளிழுப்பதில் இருந்து பாதுகாக்க ஒரு தடையாகவும் செயல்படுகிறது.

மிகவும் பயனுள்ள துணி மாஸ்க்குகள் பல அடுக்குகளால் செய்யப்படுகின்றன. அதாவது பருத்தி நூலைக் கொண்டு மிகவும் இறுக்கமாக நெய்யப்பட்ட துணி மாஸ்குகள். இதுபோன்ற பல அடுக்குகள் கொண்ட முகக்கவசமானது, உங்கள் வழியாக அதிக நீர்த்துளிகள் வெளியேறுவதையும், அதேசமயம் மற்றவர்களிடம் இருந்து உள்நுழைவதையும் தடுக்கும்" என்று அமெரிக்காவின் மேயோ கிளினிக் நிபுணர்கள் கூறுகின்றனர்.
WHO எச்சரிக்கை..! ஓமிக்ரான் தொற்றில் இருந்து துணி மாஸ்க்குகள் உங்களை  பாதுகாக்காது | coronavirus omicron infection no cloth masks are not your  armor against covid – News18 Tamil
இதெல்லாம் ஒருபுறம் இருக்க, நோஸ் வயர்களை கொண்ட துணி மாஸ்குகள் மற்றும் பிரகாசமான ஒளி நிலைமைகளின் போதும் கூட ஒளியைத் தடுக்கும் அளவிலான துணியால் செய்யப்பட்ட முகக்கவசங்கள் மட்டுமே கோவிட்-19 தொற்றுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கும் என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் கூறுகின்றன.

இதெல்லாம் வைத்து பார்க்கும் போது, உங்கள் வீட்டின் அருகில் உள்ள கடைகளில் விற்கப்படும் முகக்கவசங்கள் சர்வதேச தரத்திற்கு இணங்குகிறதா என்பதைக் கண்டறிவது மிகவும் கடினம் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
ஒமிக்ரானை தடுக்க துணி மாஸ்க் பயன்படாது! - விஞ்ஞானிகள் அறிவுரை
நாம் அணியும் முகக்கவசம் கோவிட்-19 தொற்று நோய்க்கு எதிராக போதுமான செயல்திறனை வழங்காத பட்சத்தில் அது உங்களை ஆபத்தில் ஆழ்த்துவது மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் கடுமையான ஆபத்தை உண்டாக்கும் என்பதால், துணி மாஸ்குகளை வாங்கினாலும் கூட அது நல்ல தரமான முகக்கவசமா என்பதை ஒன்றுக்கு இரண்டு முறை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

இல்லையெனில், எது தரமானது? எது தரமற்றது? என்கிற குழப்பத்தில் சிக்கிக்கொள்ள விருப்பம் இல்லாதவர்கள் துணியால் ஆன முகக்கவசங்களை தவிர்த்துவிட்டு 3 அல்லது 5 வரையிலான அடுக்குகளை கொண்ட மாஸ்குகளை பயன்படுத்த தொடங்குவது நல்லது.

Next Story
Share it