Theme Check

வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை..!! ஜூன் 1 முதல் காப்பீட்டு பிரீமியத்தில் மாற்றம்...!!

வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை..!! ஜூன் 1 முதல் காப்பீட்டு பிரீமியத்தில் மாற்றம்...!!

வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை..!! ஜூன் 1 முதல் காப்பீட்டு பிரீமியத்தில் மாற்றம்...!!
X

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவித்திருந்த மூன்றாம் நபர் மோட்டார் இன்சூரன்ஸ் ப்ரிமியம் விலையில் திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் ஜூன் 1 முதல் அமலுக்கு வரும் என்று ஒன்றிய அரசு அறிவித்திருந்தது.

2019-20 நிதியாண்டில் திருத்தப்பட்ட இந்த கட்டணங்கள், கொரோனா பரவல் காரணமாக அமல் படுத்தாமல் இருந்தது. இந்நிலையில், ஜூன் 1 முதல் நடைமுறைப்படுத்தபட்ட உள்ளது.

சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, 150 முதல் 350 சிசிக்கு உள்ள இருக்கும் இரு சக்கர வாகனங்களுக்கு, இன்சூரன்ஸ் பிரீமியம் ரூ. 1,366 ஆகவும், 350 சிசி-க்கு மேல் உள்ள இருசக்கர வாகனங்களுக்கான ஆண்டு ப்ரீமியம் ரூ. 2,804 ஆக விதிக்கப்படும்.

bike

இதேபோல் 75 சிசிக்கு மிகாமல் இருக்கும் இரு சக்கர வாகனங்களுக்கு ஐந்தாண்டு ஒற்றை ப்ரீமியம் ரூ. 2,901 ஆகவும், 75 சிசிக்கு மேல் 150 சிசி கீழ் இருக்கும் வாகனங்களுக்கு ரூ. 3,851 ஆகவும், 150 சிசிக்கு மேல் 350 சிசி கீழ் இருக்கும் வாகனங்களுக்கு ரூ. 7,365. இதோடு 350 சிசிக்கு மேல் உள்ள இரு சக்கர வாகனம் ஐந்தாண்டுகளுக்கு ரூ. 15,117 ஆகப் புதிய காப்பீடு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

1000 சிசி முதல் 1500 சிசி வரையிலான இன்ஜின் திறன் கொண்ட தனியார் கார்களுக்கான மூன்றாம் நபர் காப்பீடு ப்ரீமியம் 2019-20-ல் ரூ.3,221-ல் இருந்து ரூ. 3,416 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 1500 சிசிக்கு மேல் எஞ்சின் திறன் கொண்ட பெரிய தனியார் வாகனங்களின் ப்ரீமியம் ரூ. 7,897-ல் இருந்து ரூ. 7,890 ஆக குறைய உள்ளது.

car

இதேபோல் 1000 சிசிக்கு மிகாமல் இருக்கும் புதிய காருக்கு மூன்றாண்டுக்கான சிங்கிள் ப்ரீமியம் ரூ. 6,521 ஆகவும், 1000 சிசி முதல் 1500 சிசி வரையிலான காருக்கு ரூ.10,640 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக அறிவிக்கப்பட்ட கட்டணங்களின் கீழ் 1500 சிசிக்கு மேற்பட்ட புதிய கார்களுக்கான மூன்று ஆண்டுகளுக்குக் காப்பீடு தொகை ரூ. 24,596 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Next Story
Share it