ஒரே நேரத்தில் 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்டதா? பெண் புகாரால் பரபரப்பு !!
ஒரே நேரத்தில் 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்டதா? பெண் புகாரால் பரபரப்பு !!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தப்போதும், மீண்டும் தொற்று பரவாமல் இருக்க தடுப்பூசி போடும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. அனைத்து மாநிலங்களும் சிறப்பு முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தி வருகின்றன.
அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலம் டவ்சா என்ற பகுதியில் கிராமத்தைச் சேர்ந்த 43 வயதான கிரண் என்ற பெண், பக்கத்து ஊரான நங்கல் என்ற பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்துக்கு தடுப்பூசி போடச் சென்றனர். அவருக்கு தடுப்பூசி போடும் போது நர்ஸ் ஒரே நேரத்தில் இரண்டு டோஸ் தடுப்பூசியையும் செலுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த கிரண் வெளியேவந்து, தனது கணவரிடம் இது குறித்து கூறியுள்ளார். எனினும் அவர்கள் அங்கிருந்து வீட்டிற்கு திரும்பினர். ஆனால் வீட்டிற்கு திரும்பியதும் காய்ச்சல் வந்ததால், உடனே சுகாதார மையத்தில் சென்று விசாரித்தனர். ஆனால் நர்ஸ்கள் 2 டோஸ் போட்டதை மறுத்தனர். பின்னர் தடுப்பூசி செலுத்தியதும் காய்ச்சல் வருவது இயற்கை தான் அது ஒன்றும் பிரச்னை இல்லை என மருத்துவர்கள் அவரிடம் கூறினர்.
மேலும் மாத்திரை கொடுத்து அனுப்பினர். அந்த மாத்திரை தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண் எடுத்துக்கொண்டதும் பின்னர் காய்ச்சல் சரியானதாக கூறப்படுகிறது. எனினும் அவரது புகார் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தலைமை மருத்துவ அதிகாரி விசாரணை நடத்தி பின்னர் விளக்கம் அளித்தார். அப்போது, அந்த பெண்ணுக்கு முதலில் தடுப்பூசி போட ஊசிக்குத்தும்போது ரத்தம் வந்ததால் செவிலியர் ஊசியை எடுத்தார். பிறகு கையில் வேறொரு பகுதியில் ஊசி போட்டார். இதை அந்தப் பெண் இரண்டு டோஸ் போடப்பட்டுவிட்டதாக நினைத்துக் கொண்டார். அவர் சொல்வதில் உண்மையில்லை என்று தெரிவித்துள்ளார்.

பின்னர் மருத்துவர்கள் அந்தப் பெண்ணின் வீட்டிற்கு சென்று பரிசோதித்து பார்த்ததாகவும் அவருக்கு எந்த பக்க விளைவுகளும் இல்லை என்றும் அவர் நலமாகவே இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
newstm.in

