Theme Check

உண்மையில் சிறுவர்கள் வங்கி கணக்கில் ரூ.96 கோடி டெபாசிட் செய்யப்பட்டதா? நடந்தது என்ன?

உண்மையில் சிறுவர்கள் வங்கி கணக்கில் ரூ.96 கோடி டெபாசிட் செய்யப்பட்டதா? நடந்தது என்ன?

உண்மையில் சிறுவர்கள் வங்கி கணக்கில் ரூ.96 கோடி டெபாசிட் செய்யப்பட்டதா? நடந்தது என்ன?
X

பீகார் மாநிலம் கதிஹார் மாவட்டத்தில் இரு சிறுவர்களின் வங்கி கணக்கில் பணம் கிரிடிட் ஆகியது குறித்து மெஜேஜ் வந்துள்ளது. இதனை பார்த்த சிறுவர்கள் எவ்வளவு பணம் என்று கூட எண்ணமுடியாமல் சிறிது தடுமாறினர் என்றே கூறலாம். அதாவது, குருச்சந்திர விஸ்வாஸ், ஆசித் குமார் ஆகிய இருவரும் 6ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இருவருக்கும் பள்ளியின் சார்பில் கிராம வங்கியில் உருவாக்கிக் கொடுக்கப்பட்ட வங்கிக் கணக்கில் திடீரென இரவு ரூ.96 கோடி டெபாசிட் ஆனது.

வங்கிக் கணக்கில் ரூ.96 கோடி டெபாசிட் ஆனது குறித்து செல்போனில் வந்த தகவலையடுத்து, இரு சிறுவர்களும் தங்கள் பெற்றோரிடம் தகவல் தெரிவித்தனர். பிள்ளைகள் சொல்வதை நம்பிய பெற்றோர், ஏடிஎம் சென்று வங்கியின் கணக்கு குறித்து ஆய்வு செய்தனர்.

bihar corebihar core

அப்போது, இதில் ஆசித் குமார் கணக்கில் ரூ.6.2 கோடியும், குருச்சந்திர விஸ்காஸ் கணக்கில் ரூ.90 கோடியும் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, சிறுவர்களின் பெற்றோர் உடனடியாக வங்கிக்குச் சென்று இந்தத் தகவலைத் தெரிவித்தபோது, வங்கி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். வங்கி அதிகாரிகள் கணக்கை ஆய்வு செய்தபோது, கணக்கில் குறைந்தபட்ச பணம் மட்டுமே இருந்தது, ஆனால், கணினியின் கணக்கில் ரூ.96 கோடி காட்டியது கண்டு குழம்பினர்.

இதுகுறித்து கதிஹார் மாவட்ட ஆட்சியர் உதயன் மிஸ்ரா கூறுகையில், இரு சிறுவர்கள் வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தகவல் குறித்து அறிந்தேன். இந்த தகவல் வதந்தியாக பரவி வருகிறது. சிறுவர்களின் வங்கி கணக்குக்கு பணம் செல்லவில்லை.

bihar core

வங்கியின் கணினிச் செயல்பாட்டு முறையில் சில கோளாறுகள் நடந்திருக்கலாம் என்று வங்கியின் மேலாளர் தகவல் தெரிவித்துள்ளார். சிறுவர்களின் கணக்கில் குறைவான பணம் இருக்கிறது. ஆனால், கணினியின் கணக்கில் ரூ.900 கோடி காட்டுகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை கேட்டுள்ளேன் எனத் தெரிவித்தார்.

இதேபோன்று பீகாரில்அண்மையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ககாரியா மாவட்டத்தில் உள்ள பக்தியார்பூர் கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித் தாஸ் என்பவர் வங்கிக் கணக்கில் தவறுதலாக ரூ.5 லட்சம் கடந்த மார்ச் மாதம் டெபாசிட் செய்யப்பட்டது. அந்தப் பணத்தைத் திருப்பி அனுப்ப வங்கி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பியபோதிலும் அதற்கு அவர் முன்வரவில்லை. இதையடுத்து, வங்கி நிர்வாகம் அளித்த புகாரில் ரஞ்சித் தாஸை போலீசார் கைது செய்தனர்.

bihar core

அவரிடம் நடத்திய விசாரணையில், பிரதமர் மோடி ரூ.15 லட்சம் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தார். அதில் முதல் தவணையாக ரூ. 5 லட்சம் டெபாசிட் செய்தார் என நினைத்து எடுத்துச் செலவு செய்தேன் எனத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Tags:
Next Story
Share it