இனி மெட்ரோ ட்ரெயினில் திரைப்படங்கள், சீரியல் பார்க்கலாம்! பயணிகள் உற்சாகம்!!
சென்னை விமான நிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டை வரையிலான மெட்ரோ ரெயில் பாதையின் நீளம் 45 கி.மீ தூரமாகும். இந்த பயண தூரத்தைக் கடக்க ஆகும் மொத்த நேரம் தோராயமாக 40 நிமிடங்கள் ஆகிறது. இந்த பயண நேரத்தில் பயணிகள் அலுப்பில்லாமல் செல்ல சுகர் பாக்ஸ் என்ற அமைப்பை மெட்ரோ ரெயிலில் கொண்டு வருவதற்கு மெட்ரோ நிர்வாகம் திட்டமிடப்பட்டுள்ளது. பயணிகள் சுகர் பாக்ஸ்

சென்னை விமான நிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டை வரையிலான மெட்ரோ ரெயில் பாதையின் நீளம் 45 கி.மீ தூரமாகும். இந்த பயண தூரத்தைக் கடக்க ஆகும் மொத்த நேரம் தோராயமாக 40 நிமிடங்கள் ஆகிறது.

இந்த பயண நேரத்தில் பயணிகள் அலுப்பில்லாமல் செல்ல சுகர் பாக்ஸ் என்ற அமைப்பை மெட்ரோ ரெயிலில் கொண்டு வருவதற்கு மெட்ரோ நிர்வாகம் திட்டமிடப்பட்டுள்ளது. பயணிகள் சுகர் பாக்ஸ் என்ற மொபைல் ஆப்-ஐ டவுன்லோடு செய்து ரிஜிஸ்டர் செய்து கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் இந்த ஆப் மூலமாக தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் திரைப்படங்கள், சீரியல்களை மெட்ரோ ரயில் பயணத்தில் பார்த்து ரசிக்க முடியும்.ரெயிலில் வழங்கப்பட்டுள்ள வைஃபை கணெக்ஷன் மூலமாக பயணிகள் இந்த வசதியை பெற்றுக் கொள்ளலாம். ஆன்லைனிலும், ஆஃப்லைனிலும் பயணிகள் இந்த ஆப்-இல் வீடியோக்களை பார்த்து ரசிக்கலாம். வெறும் 10 நிமிடங்களில் திரைப்படத்தை டவுன்லோடு செய்து கொள்ளக் கூடிய வகையில் சுகர் பாக்ஸ் ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பயணிகளை மகிழ்விக்கவும், மெட்ரோ ரெயிலை பயன்படுத்த ஊக்கப்படுத்தும் வகையிலும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக மெட்ரோ ரெயில் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
newstm.in

