Theme Check

திரைப்படங்களை நிர்வாணமாக சென்று பாருங்க! உளறிக் கொட்டிய மிஷ்கின்!!

சைக்கோ விமர்சனம் - திரைப்படங்களை நிர்வாணமாக சென்று பாருங்கள் - மிஷ்கின் அதிரடி பேட்டி

திரைப்படங்களை நிர்வாணமாக சென்று பாருங்க! உளறிக் கொட்டிய மிஷ்கின்!!
X

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் சைக்கோ. இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் உள்ளன.
இந்நிலையில், ஒரு இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் அவர் இது பற்றி விளக்கமளித்துள்ளார். அதில், திரைப்படங்களை பேரன்போடு பாருங்கள்.. உங்களுக்குள் ஒரு இயக்குனரை வைத்துக் கொண்டு என் படத்தை பார்க்கக் கூடாது. சிசிடிவி கேமரா இல்லாத இடத்தில் அவன் கொலை செய்திருக்கலாம். அந்த இடத்தை அவன் தேர்ந்தெடுத்திருக்கலாம் அதையெல்லாம் காட்டினால் போராடித்து விடும்.
திரைப்படங்களை நிர்வாணமாக சென்று பாருங்க! உளறிக் கொட்டிய மிஷ்கின்!!

அதே போல், போலீசை டம்மியாக காட்டியிருக்கிறேன் எனக் கூறுகிறார்கள். சைக்கோ கொலைகாரனை கண் தெரியாத என் ஹீரோ தான் கண்டுபிடிக்கிறான் என்பது தான் கதை. எனவே, போலீசை டம்மியாகத் தான் காட்ட வேண்டும். அதோடு, இதுவரை கண்டு பிடிக்கவே முடியாத கொலைகள் உலகம் முழுவதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. எனவே, மூளையை கழட்டி வைத்து விட்டு திரைப்படங்களை பாருங்கள். ரசியுங்கள். ஆராய்ச்சி செய்யாதீர்கள். அப்படி செய்தால் உங்கள் திரைப்படங்களை ரசிக்க முடியாது எனக் கூறியுள்ளார்.
திரைப்படங்களை நிர்வாணமாக சென்று பாருங்க! உளறிக் கொட்டிய மிஷ்கின்!!

மேலும், ஒரு திரைப்படத்திற்கு செல்லும் போது நீங்கள் நிர்வாணமாக செல்ல வேண்டும். ஹெல்மெட்டை பைக்கில் விட்டு வருவது போல் மூளையையும் கழட்டி வைத்து விட்டுத் தான் நீங்கள் செல்ல வேண்டும். படத்தில் இயக்குனர் என்ன சொல்கிறார் அதை மட்டுமே உணர வேண்டும். மூளையோடு பார்க்காமல் மனதோடு பார்க்க வேண்டும்.. படம் முடிந்ததும் அதுபற்றி யோசிக்கக் கூடாது என அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

newstm.in

Tags:
Next Story
Share it