Theme Check

ஒரு மாதமாக யூடியூப் பார்த்து வெடிகுண்டு தயாரித்த இளைஞர்! - விமான நிலையத்தில் பரபரப்பு

ஒரு மாதமாக யூடியூப் பார்த்து வெடிகுண்டு தயாரித்த இளைஞர்! - விமான நிலையத்தில் பரபரப்பு

ஒரு மாதமாக யூடியூப் பார்த்து வெடிகுண்டு தயாரித்த இளைஞர்! - விமான நிலையத்தில் பரபரப்பு
X

யூடியூப்பில் அத்தனை விஷயங்களும் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால், யூடியூப் பார்த்து வெடிகுண்டு தயாரித்ததை அறிந்து போலீஸார் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். கடந்த திங்கள்கிழமை கர்நாடகாவில் உள்ள மங்களூரு விமான நிலையத்தின் டிக்கெட் கவுன்டர் அருகில் பை ஒன்று கேட்பாரற்று கிடந்தது. விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளால் அந்தப் பை கைப்பற்றப்பட்டது. பையை சோதனையிட்ட போது, உள்ளே வெடிகுண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஒரு மாதமாக யூடியூப் பார்த்து வெடிகுண்டு தயாரித்த இளைஞர்! - விமான நிலையத்தில் பரபரப்பு

இதனால், விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக, வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அதனை கைப்பற்றி மங்களூரூவில் உள்ள கெஞ்சாரி மைதானத்தில் வெடிகுண்டு நிபுணர்களால் அந்த குண்டு வெடிக்க வைக்கப்பட்டது.

ஒரு மாதமாக யூடியூப் பார்த்து வெடிகுண்டு தயாரித்த இளைஞர்! - விமான நிலையத்தில் பரபரப்புஇதனையடுத்து விமான நிலையத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் ஆட்டோவில் வந்த ஒருவர், அந்த பையை அங்கே விட்டு சென்றது தெரிய வந்தது.

ஒரு மாதமாக யூடியூப் பார்த்து வெடிகுண்டு தயாரித்த இளைஞர்! - விமான நிலையத்தில் பரபரப்பு

இதற்கிடையில், 36 வயதான ஆதித்யா ராவ் என்பவர் பெங்களூரு போலீசில் சரணடைந்து உள்ளார். விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரிகள் அவர் மீது வெடிப்பொருள் சட்டம் மற்றும் சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். பொறியியல் மற்றும் எம்.பி.ஏ படித்த பட்டதாரியான அவர் பெங்களூரு விமான நிலையத்தில், காவலர் பணிக்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால் முறையான ஆவணங்கள் தாக்கல் செய்யததால் வேலை மறுக்கப்பட்டது. இதற்கு, பழிவாங்கும் நடவடிக்கையாக ஆதித்யாராவ் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு வைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஒரு மாதமாக வெடிகுண்டுகளை தயாரிப்பது குறித்து யூடியூப் வழியாக பார்த்து தெரிந்து கொண்டுள்ளார். பின்னர், வெடி பொருள்களை வாங்கி குண்டு தயாரித்ததாக போலீஸாரிடத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

newstm.in

Tags:
Next Story
Share it