Theme Check

வதந்திகளை தடுக்க வாட்ஸ் ஆப் குரூப் - தமிழக போலீஸாரின் அதிரடி

சமூக வலைதளங்களில் பரவும் போலியான தகவல்கள் மற்றும் வதந்திகளை தடுக்க தமிழக காவல்துறையினர் வாட்ஸ் ஆப் குரூப் ஒன்றை தொடங்கியுள்ளனர். இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக ஏராளனமான பொய் தகவல்கள் மிக எளிதில் பரப்பப்படுகின்றன. காவல்துறை பெயரிலே கூட வதந்தி பரப்புவது சர்வசாதாரணமாகிவிட்டது.

வதந்திகளை தடுக்க வாட்ஸ் ஆப் குரூப் - தமிழக போலீஸாரின் அதிரடி
X

சமூக வலைதளங்களில் பரவும் போலியான தகவல்கள் மற்றும் வதந்திகளை தடுக்க தமிழக காவல்துறையினர் வாட்ஸ் ஆப் குரூப் ஒன்றை தொடங்கியுள்ளனர்.


இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக ஏராளனமான பொய் தகவல்கள் மிக எளிதில் பரப்பப்படுகின்றன. காவல்துறை பெயரிலே கூட வதந்தி பரப்புவது சர்வசாதாரணமாகிவிட்டது. இதனால் பாதிக்கப்படுபவர்கள் ஏராளம்.


இந்நிலையில் போலி செய்திகளை தடுக்கவும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழக காவல்துறை வாட்ஸ் ஆப் குழு ஒன்றை தொடங்கியுள்ளது. உங்கள் மொபைலில் 94981 11191 என்ற எண்ணை தமிழ்நாடு காவல்துறை என சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு, அந்த எண்ணிற்கு JOIN என்று டைப் செய்து குறுஞ்செய்தி அனுப்புங்கள். அதன்பிறகு உடனடியாக அந்தக்குழுவில் சேர்க்கப்படுவீர்கள்.


குற்றம் தொடர்பான புகார்களுக்கு இந்த எண்ணை பயன்படுத்தக்கூடாது. உங்களுக்கு வரும் போலியான குறுஞ்செய்தி, வதந்திகள் குறித்து இந்த தொலைபேசி எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம்.

newstm.in

Tags:
Next Story
Share it