Theme Check

தமிழகத்தைப் போல் கேரளாவிலும்.. வாவா சுரேஷ் கோரிக்கை..!

தமிழகத்தைப் போல் கேரளாவிலும்.. வாவா சுரேஷ் கோரிக்கை..!

தமிழகத்தைப் போல் கேரளாவிலும்.. வாவா சுரேஷ் கோரிக்கை..!
X

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை புது புரைக்கல் நாகர் காவு பிரதிஷ்டை விழாவில், கேரள மாநிலத்தின் பிரபல பாம்பு பிடி வீரர் வாவா சுரேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அதன் பின்னர் நிருபர்களிடம் வாவா சுரேஷ் கூறியதாவது: “பாரம்பரியமாக பாம்பு பிடிப்பதை தொழிலாக கொண்ட இருளர் இன மக்கள் பாம்பு பிடிப்பதற்கு தமிழக அரசு அங்கீகாரம் அளித்துள்ளது வரவேற்கத்தக்கது.
Dark people allowed to catch snakes .. Wawa Suresh praises Tamil Nadu  government | pipanews.com
இதை போன்று கேரளாவிலும் பாரம்பரியமாக பாம்பு பிடிப்பதை தொழிலாக மேற்கொள்ளும் சமூகத்திற்கு அரசு அங்கீகாரம் வழங்க வேண்டும்.

இதன் மூலம் அவர்கள் வாழ்வாதாரம் உயருவதுடன், மருத்துவ துறைக்கு பாம்பு கடி மற்றும் கேன்சர் நோய் சிகிச்சைக்கான மருந்தும் தட்டுப்பாடின்றி கிடைக்கும். கடந்த 35 ஆண்டுகளாக பாம்பு பிடிப்பதை சேவையாக செய்து வருகிறேன்.

14 முறை பாம்பு கடித்ததில் உயிர் பிழைத்தேன். கடைசியாக பாம்பு கடித்ததில் உயிர் பிழைத்து பின்பு தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்துள்ளேன்.

தற்போது, கேரளாவில் 1500 ராணுவ வீரர்களுக்கு பாம்பு பிடிக்கும் பயிற்சி அளித்துள்ளேன். எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாத நிலையில் மக்களுக்கான இந்த சேவை தொடரும்” என்று அவர் கூறினார்.

Next Story
Share it