நாம் கொரோனா 3ஆவது அலையின் தொடக்கத்தில் இருக்கிறோம்.. WHO எச்சரிக்கை !
நாம் கொரோனா 3ஆவது அலையின் தொடக்கத்தில் இருக்கிறோம்.. WHO எச்சரிக்கை !

கொரோனா 3வது அலையின் தொடக்கத்தில் இருக்கிறோம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் பெருந்தொற்று ஒன்றரை ஆண்டுகளை கடந்தபோதும் உலகத்தை உலுக்கி வருகிறது. இந்தியாவில் கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலை 2 கோடிக்கும் அதிமானோர் பாதிக்கப்பட்டனர். 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
குறிப்பாக முதல் அலையைவிட இரண்டாதுவது அலை தான் இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதாவது நாடு முழுவதும் கொரோனா 2ஆம் அலை கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிகரிக்கத் தொடங்கியது. ஆக்சிஜன் பற்றாக்குறை நாடு முழுவதும் எதிரொலித்தது.

எனினும், தற்போது கொரோனா தொற்று பரவல் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. அதேநேரத்தில் 3வது அலையை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை அனைத்து மாநிலங்களும் மேற்கொண்டு வருகின்றன. கொரோனா 3ஆம் அலை ஆகஸ்ட் மாத இறுதியில் இந்தியாவை தாக்கக்கூடும் எனவும், அதன் தாக்கம் மற்ற அலைகளை விட குறைவாக இருக்கும் எனவும் ஐசிஎம்ஆர் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்டரோஸ் ஆதனோம், துரதிருஷ்டவசமாக கொரோனா பெருந்தொற்றின் 3வது அலை தொடக்கத்தில் இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். டெல்டா வைரஸ் பரவல் காரணமாக உலக அளவில் கொரோனா தொற்றும், உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளதாக தெரிவித்த உலக சுகாதார அமைப்பு, பொதுமக்கள் கட்டுப்பாட்டு விதிகளை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

தற்போது, டெல்டா பிளஸ் வைரஸ் 111க்கும் அதிகமான நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எனவே 3ஆவது அலை பெரியளவில் பாதிப்பு ஏற்படுத்தும் முன் உரிய நடவடிக்கை தேவை என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
newstm.in

