Theme Check

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது திமுகவினர் தாக்குதல்.. கண்டுகொள்ளாத போலீசார்

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது திமுகவினர் தாக்குதல்.. கண்டுகொள்ளாத போலீசார்

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது திமுகவினர் தாக்குதல்.. கண்டுகொள்ளாத போலீசார்
X

தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 28ஆம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில் நேற்று மாலையுடன் வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்தது. நேற்று வேட்புமனுத் தாக்கலுக்கு கடைசி நாள் என்பதால் ஏராளமானோர் ஒரே நேரத்தில் குவிந்தனர்.

இதனிடையே வேலூர் மாநகராட்சியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுடன் மாவட்ட துணைத் தலைவர் சங்கரும் வந்திருந்தார். அதேநேரத்தில் திமுகவினரும் வேட்புமனு தாக்கலுக்கு வந்திருந்தனர். அப்போது, திமுகவினரை மட்டும் அதிக எண்ணிக்கையில் அனுமதிப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.

f

அத்துடன், அதிகாரிகள் பாரபட்சமாக நடந்துகொள்வதாக புகார் தெரிவித்த சங்கர், அங்கிருந்த காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் திமுகவினர் மீது குற்றம்சாட்டினர். இதனையறிந்த, அங்கிருந்த திமுகவினர் அவரை சரமாரியாக தாக்கினர். முதலில் கண்டுகொள்ளாமல் இருந்த போலீசார், மோதல் போக்கு ஏற்பட்டதால் அவர்களை தடுத்து நிறுத்தியதாக கூறப்பட்டது.

நாம் தமிழர் கட்சி நிர்வாகியை திமுகவினர் தாக்கிய சம்பவத்தால், சிறிது நேரம் பதற்றம் நிலவியது. இதற்கு நாம் தமிழர் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து முழக்கம் எழுப்பினர். போலீசார் ஆளும் கட்சியினருக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம்சாட்டினர். மேலும் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்தனர்.

newstm.in

Next Story
Share it