நாம் அரசியலை தூய்மைப்படுத்த வந்துள்ளோம்... தூய்மை அடைந்தால் பாஜக ஆட்சிக்கு வந்துவிடும் - அண்ணாமலை

நாம் அரசியலை தூய்மைப்படுத்த வந்துள்ளோம்... தூய்மை அடைந்தால் பாஜக ஆட்சிக்கு வந்துவிடும் - அண்ணாமலை

நாம் அரசியலை தூய்மைப்படுத்த வந்துள்ளோம்... தூய்மை அடைந்தால் பாஜக ஆட்சிக்கு வந்துவிடும் - அண்ணாமலை
X

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில், ஒரே நாடு பத்திரிகையின், ‘சுதந்திரம் 75 ஆரம்ப விழா’ என்ற சிறப்பு மலர் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த மலரை சுதந்திரப் போராட்ட வீரரும், பாஜக மூத்த தலைவருமான டாக்டர் ஹண்டே வெளியிட, தமிழ்நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலை பெற்றுக்கொண்டார்.

விழாவில் அண்ணாமலை பேசியதாவது,

போஸ்டர் கலாசாரத்தை தமிழ்நாடு பாஜகவில் தடை செய்ய வேண்டும். அதற்கு முன்னோடியாக எனது போட்டோவையும் போட வேண்டாம் என்று கூறப்போகிறேன். நமது வேலை, எழுத்து, பேச்சின் மூலமாக தெரிய வேண்டுமே தவிர ஆளுயர கட்-அவுட்டுகள் மூலம் அல்ல. நாம் அரசியலை தூய்மைப்படுத்த வந்துள்ளோம். அரசியல் தூய்மை அடைந்தால் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்துவிடும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:
Next Story
Share it