Theme Check

எம்எல்ஏவை காணோம்.. காவல் நிலையத்தில் மனைவி புகார்..!

எம்எல்ஏவை காணோம்.. காவல் நிலையத்தில் மனைவி புகார்..!

எம்எல்ஏவை காணோம்.. காவல் நிலையத்தில் மனைவி புகார்..!
X

மகாராஷ்டிராவில், சிவசேனா தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அந்தக் கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் குஜராத் மாநிலம் சூரத் ஹோட்டலில் தங்கி உள்ளனர்.

இதில், எம்எல்ஏக்களை அவர்களின் குடும்பத்தினரே தொடர்பு கொள்ள முடியவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், அகோலாவில் உள்ள பாலாப்பூர் தொகுதி சிவசேனா எம்எல்ஏ நிதின் தேஷ்முக்கை காணவில்லை என, அவருடைய மனைவி பிரன்ஜாலி தேஷ்முக் என்பவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அகோலா சிவில் லைன்ஸ் போலீசில் அளித்த புகாரில், “நேற்று இரவு முதல் எனது கணவர் நிதின் தேஷ்முக்கை தொடர்பு கொள்ள முடியவில்லை; அவரை கண்டுபிடித்து தரவேண்டும்” எனக் கூறியுள்ளார்.

இதற்கிடையே, குஜராத் சென்ற எம்எல்ஏ நிதின் தேஷ்முக் உடல் நல பாதிப்பு காரணமாக சூரத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Next Story
Share it