Theme Check

மேகதாது அணையை கட்டியே தீருவோம்.. அமைச்சர் பேச்சால் மீண்டும் சலசலப்பு !!

மேகதாது அணையை கட்டியே தீருவோம்.. அமைச்சர் பேச்சால் மீண்டும் சலசலப்பு !!

மேகதாது அணையை கட்டியே தீருவோம்.. அமைச்சர் பேச்சால் மீண்டும் சலசலப்பு !!
X

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு தமிழகத்தில் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மேலும் அணை கட்டுவதை தடுத்துநிறுத்த சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.

அண்மையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து மேகதாது அணை பிரச்சினை குறித்து தமிழ்நாட்டின் நிலைபாட்டை விளக்கி, நமது மாநில விவசாயிகளின் நலன் காக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அதோடுமட்டுமல்லாமல் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு இன்று அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியது. இந்த கூட்டத்தில் மேகதாது திட்டத்துக்கு மத்திய அரசு எந்த அனுமதியும் வழங்கக் கூடாது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, மேகதாது அணையை கட்டியே தீர்வோம் என கூறியுள்ளார். செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், மேகதாது அணை கட்டுமான பணியை நிறுத்தும் பேச்சுக்கே இடம் இல்லை. குடிநீர் விவகாரம் முக்கியமானது என்பதால் அணை கட்டுவதற்கும் மக்களின் நலனை பாதுகாக்கவும் மேகதாதுவில் அணை கட்ட கர்நடகாவிற்கு உரிமை உள்ளது.

குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் உச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. கர்நாடகாவில் கோரிக்கையை மத்திய அரசு சட்ட ரீதியாக பரிசீலிக்கும். பிரச்சினைகளை காவிரி தீர்ப்பாயம் தீர்த்து வைத்ததால் மேகதாது அணையை நிறுத்த எந்த காரணமும் இல்லை என கூறியுள்ளார்.

newstm.in

Tags:
Next Story
Share it