பயனாளர்களின் தகவல்களை பகிர மாட்டோம்.. இறங்கிவந்த வாட்ஸ்அப் நிறுவனம் !!
பயனாளர்களின் தகவல்களை பகிர மாட்டோம்.. இறங்கிவந்த வாட்ஸ்அப் நிறுவனம் !!

பயனாளர்களின் தகவல்களை ஃபேஸ்புக் நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ளமாட்டோம் என்று உயர்நீதிமன்றத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட ஃபேஸ்புக் நிறுவனத்தின் துணை நிறுவனமான வாட்ஸ்அப் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் தகவல் பறிமாற்றத்தில் வாட்ஸ்அப் முதன்மையாக உள்ளது. இதனால் நாளுக்கு நாள் அதன் பயன்பாடு அதிகரித்தது.

இந்த நிலையில், வாட்ஸ்அப் நிறுவனம் தனிநபர் தகவல் பாதுகாப்பு கொள்கையில் அண்மையில் மாற்றம் செய்துள்ளது. அதன்படி, பயனாளிகளின் தகவல்களை ஃபேஸ்புக் நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு வாடிக்கையாளர்கள் தரப்பில் இருந்தும், அரசு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

மத்திய அரசு வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கும் நிலை ஏற்பட்டது. மேலும் வாட்ஸ்அப் நிறுவனத்தின் முடிவை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. வழக்கின் விசாரணையின்போது, ஃபேஸ்புக் நிறுவனத்துடன் தகவல் பகிரப்படாது என வாட்ஸ்அப் உறுதியளித்தது.
newstm.in

