ஜெசியை காணோம்.. தெருவெங்கும் போஸ்டர்.. கண்டுபிடித்தால் சன்மானம்..!
ஜெசியை காணோம்.. தெருவெங்கும் போஸ்டர்.. கண்டுபிடித்தால் சன்மானம்..!

கோவையில், பூனையை காணவில்லை, கண்டுபிடித்து தருபவர்களுக்கு 5ஆயிரம் வழங்கப்படும் என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்ப்பது என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. செல்லப்பிராணிகள் வளர்த்தால் கஷ்டம் வந்தாலும் பிராணிகளுடன் நேரம் செலவிட்டால் மனது மிகவும் சந்தோஷமாக இருக்கும்.
அந்த வகையில், கோவை ராமநாதபுரம் பகுதியில் ஒருவர் தனது வீட்டில் பூனை ஒன்றை ஜெயஸ்ரீ என பெயரிட்டு செல்லமாக வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் 29ம் தேதி முதல் அந்த பூனையைக் காணவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் அதைக் கண்டுபிடிக்க முடியாததால் பூனை காணவில்லை என போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார்.

அந்த போஸ்டரில், பெயர்: ஜெயஸ்ரீ, வயது: ஆறு, அடையாளம்: உதட்டில் மச்சம். நவம்பர் 29ம் தேதி முதல் காணவில்லை, நீங்கள் எங்கள் பூனையை கண்டீர்கள் என்றால் கீழ்வரும் தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும். பூனையைக் கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூபாய் ஐந்தாயிரம் வழங்கப்படும் என்ற வாசகத்துடன் பூனையின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.
காணாமல் போன பூனைக்காக போஸ்டர் அடித்து தெருத் தெருவாக ஒட்டியிருப்பது பொதுமக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

