சட்டமன்றத் தேர்தலில் 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம்
சட்டமன்றத் தேர்தலில் 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம்

உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 75 இடங்களில் 67-ல் பாஜக வென்றது. பாஜகவின் மிகப்பெரும் வெற்றியை அடுத்து அம்மாநில முதல்வரும் பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான யோகி ஆதித்யநாத் கூறியதாவது,
மாநிலத்தில் நடந்த மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் பாஜக 75 இடங்களில் 67 இடங்களில் வென்றுள்ளது. பாஜக தொண்டர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். 2022-ம் ஆண்டில் நடக்கும் சட்டமன்ற தேர்தலில் பாஜக 300 இடங்களுக்கும் அதிகமாகக் கைப்பற்றும். பிரதமர் மோடி, அமித் ஷா, நட்டா ஆகியோரின் வழிகாட்டலில் இந்த வெற்றி கிடைத்துள்ளது என்றார்.
மேலும், மாநிலத்தில் கடந்த நான்கரை ஆண்டுகள் தமது ஆட்சியில் எந்த ஒரு வளர்ச்சித் திட்டத்தையும் செயல்படுத்தாமல் விடவில்லை என்று அவர் கூறினார். உள்கட்டமைப்பு வசதிகள், பொருளாதார வளர்ச்சி போன்றவற்றுடன் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமது அரசு மக்களின் ஒத்துழைப்புடன் போராடி வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

