Theme Check

வானதியை கலாய்க்கும் வலைதளவாசிகள்..! எதற்காக தெரியுமா..?

வானதியை கலாய்க்கும் வலைதளவாசிகள்..! எதற்காக தெரியுமா..?

வானதியை கலாய்க்கும் வலைதளவாசிகள்..! எதற்காக தெரியுமா..?
X

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் 20 இடங்களில் போட்டியிட்ட அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக 4 இடங்களில் வெற்றி பெற்றது. இதில், பாஜகவின் தேசிய மகளிர் அணி செயலாளர் வானதி சீனிவாசன் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதியில், காங்கிரஸ் மற்றும் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் ஆகியோரை பின்னுக்கு தள்ளி. 1728 வாக்குகள் வித்தியாசத்தில் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார்.

இதனைத் தொடாந்து எம்எல்ஏவாக பதவியேற்றுக்கொண்ட வானதி சீனிவாசன் இரண்டு நாட்களுக்கு முன்பு கோவை தெற்கு தொகுதியில் தன்னுடைய அலுவலகத்தின் திறப்பு விழாவை நடத்தி, அதுதொடர்பான புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதில், எம்எல்ஏ அலுவலகத்தில் உள்ளே சுவற்றில் ‘தன லாபம்’ என்று எழுதி பூஜைகள் செய்யப்பட்டிருந்தது.


இதனை பார்த்த சமூக வலைதளவாசிகளும் மீம்ஸ் கிரியேட்டர்களும், ‘இது எம்.எல்.ஏ அலுவலகமா அல்லது தொழில் நிறுவனமா..?’, ‘வானதி அக்காவுக்கு 60ம் கல்யாணம் நடந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களா..?’ என்பது போன்ற பதிவுகளைப் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

Tags:
Next Story
Share it