Theme Check

ஆபாச பேச்சால் ஆப்பு.. டிக்டாக் சூர்யா, சிக்கா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..!

ஆபாச பேச்சால் ஆப்பு.. டிக்டாக் சூர்யா, சிக்கா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..!

ஆபாச பேச்சால் ஆப்பு.. டிக்டாக் சூர்யா, சிக்கா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..!
X

ரவுடி பேபி சூர்யா மற்றும் அவரது நண்பர் சிக்கா என்கிற சிக்கந்தர் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார்.

டிக்டாக் செயலி மூலம் பிரபலமானவர்கள் சுப்புலட்சுமி என்கிற சூர்யாவும், சிக்கா என்கிற சிக்கந்தர் ஷாவும். கோவையை சேர்ந்த யூடியூப் சேனல் நடத்தும் பெண்மணி குறித்து இவர்கள் இருவரும் ஆபாசமாக பேசியதாக புகார் எழுந்தது.
ஆபாச நாயகி ரவுடி பேபி சூர்யா மதுரையில் கைது - Health Tips in Tamil, Beauty  Tips in Tamil, ஆன்மிக தகவல்கள்
இதையடுத்து, கடந்த ஜனவரி மாதம் 4-ம் தேதி, கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சூர்யா மற்றும் சிக்கா இருவரையும் கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

இதனிடையே, இவர்கள் இருவரும் எந்த நேரத்திலும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படலாம் என்ற நிலை இருந்து வந்தது.

இந்நிலையில், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் பரிந்துரையின் பேரில், சூர்யாவையும் சிக்காவையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார். ஆட்சியரின் உத்தரவின் நகல், சிறையில் உள்ள சூர்யா மற்றும் சிக்கா இருவரிடமும் வழங்கப்பட்டுள்ளது.

Next Story
Share it